உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூ-வீலர்களை கழுவிய மாணவர்கள்; ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்

டூ-வீலர்களை கழுவிய மாணவர்கள்; ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 156 மாணவ, மாணவியருடன் எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.பள்ளிக்கு சென்றிருந்த மாணவர்கள் சிலரை, நேற்று முன்தினம் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மூன்று பேர், தங்களது, டூ-வீலர்களை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்தனர்.இதை, அதே கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், தங்களது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்து, பரவ விட்டனர். இது குறித்து கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் நான்கு பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Venkat Venkat0007b
அக் 13, 2024 07:44

போலீஸ் வீட்டில் எடுபுடி வேலை செய்வது படிக்கும் குழந்தைகள் அல்ல தங்கள் செய்யும் தவறுகளை போலீஸ் கண்டு கொள்ளாமல் இருக்க கேடிகள் செய்வது


Shankaran Krishnan
அக் 12, 2024 15:31

இதை நான் ஆதரிக்கவில்லை ஆனால் இதற்கும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீட்டில் எடுபிடி வேலை செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .இரண்டும் தவறு அதற்க்கு என்ன தண்டனை


Karunakaran
அக் 12, 2024 13:18

மாணவர்கள் ஆசிரியர் மீதுள்ள அன்பின் பால்/பிரியத்துடன் இது போல் நடந்திருக்கலாம்,விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 12, 2024 10:27

வண்டி கழுவிட்டாய்ங்களா ? இதெல்லாம் ஒரு மேட்டரா ?


வாய்மையே வெல்லும்
அக் 12, 2024 09:50

ஆயுத பூஜைக்கு போகி கொண்டாட்டம் படிக்கும் மாணவர்களை வண்டிகழுவ செய்யச்சொன்ன ஆரிசியருக்கு வயிற்றுவலி வரவைத்த வில்லாஜ் உண்மை விளம்பிகளுக்கு ஒரு ஓஹோ போடு ..


Arul. K
அக் 12, 2024 08:41

இவனுங்களுக்கு பேரு சமூக ஆர்வலர் . சந்துலயும் பொந்துலயும் கஞ்சா விக்கிறானுங்களே அதை எடுத்து போடட்டுமே


பாமரன்
அக் 12, 2024 08:15

இந்த விஷயத்துக்கு சப்போர்ட் பண்ணலை... இரண்டு விஷயங்களை ஜப்பான் பற்றி சொல்லனும். அங்கே பள்ளி குழந்தைகள் தங்களது வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்வதென்பது கற்றலின் ஒரு பகுதி. இரண்டாவதாக ஜப்பானில் தனியாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதில்லை... ஏன் சொன்னேன்னு புரிஞ்சிருக்கும். இங்கே இருக்கும் சில வாத்திகள் இது மட்டுமா பண்ணுதுக... வீட்டு வேலை முதல் முதுகு சொறிந்து விட வைப்பது வரை... ஈனப்பிறவிகள்... திரும்ப சொல்றேன்... எல்லாரையும் அல்ல. இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ் ஆபீஸர் என்ன பண்றார்... ட்ரைனிங் வந்த போலீஸை வீட்டுவேலை செய்ய வைப்பது பொண்டாட்டி புள்ளைக்கு முறை வாசல் செய்வது போன்றவற்றிற்கு பயன்படுத்தறாங்க... அரசியல்வியாதிங்க படிச்சவனை கூப்பிட்டு டம்மியாக வச்சி துதி பாட யூஸ் பண்றாங்க.. அட ஊடகங்கள் என்ன ஒழுங்கா.. பிஸ்கட்டுக்கு மயங்கி பீப்பி ஊதறாங்க., மொத்தத்தில் சக மனிதர்களை மதிப்பது குறைந்து வருகிறது.... அழிவின் தொடர்ச்சி...


கோபாலகிருஷ்ணன்
அக் 12, 2024 12:46

அழிவின் ஆரம்பம்....!!!


aaruthirumalai
அக் 12, 2024 14:55

அருமை ஊதியத்த எழுத விட்டுட்டீங்க


maan
அக் 12, 2024 07:34

நாங்க எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்ஸ். ஆனா பெண் பிள்ளைகள் க்ளாஸ்லயே தண்ணியடிச்சாலும் கண்டுக்க மாட்டோம்.


vadivelu
அக் 12, 2024 07:22

இப்படிப்பட்டவர்களைத்தான் ஆதிக்க சாதி என்று உள்ள வேண்டும். பிள்ளை பூச்சிகளை அல்லவா சொல்லி வந்தோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை