உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது

போலி பணி நியமன உத்தரவு வழங்கி மோசடி; ஆசை காட்டி ரூ.13 லட்சம் ஏமாற்றிய இருவர் தேனியில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்த ஒப்பந்ததாரர் சசிக்குமார், 34, அனன்யா, 37, ஆகிய இருவரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.எப்படியும் அரசு வேலை பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்க திட்டம் போடும் மோசடிப் பேர்வழிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்தவகையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவரிடம் மோசடி நடந்துள்ளது.இது குறித்து அந்த நபர் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கம்பத்தை சேர்ந்த நபரிடம் ரூ.13.08 லட்சம் பெற்று போலி பணி ஆணை வழங்கி சோசடி செய்தது தெரியவந்தது. அந்தப் பணி நியமன ஆணையுடன் குறிப்பிட்டு அலுவலகம் சென்றபோதுதான், மோசடியில் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மோசடி செய்த ஒப்பந்ததாரர் சசிக்குமார், 34, அனன்யா, 37, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Murthy
மார் 04, 2025 18:12

செந்தில்பாலாஜியின் வாரிசா இருக்கும் . .....


R Hariharan
மார் 04, 2025 16:21

இவ்வளவு பணம் கொடுத்து அரசாங்க வேளையில் சேர அவசியம் என்ன. முதலில் அவரகள் நன்கு வசரடித்து இருக்க வேண்டும். இதில் அந்த துறை சம்பத்தப்பட்ட ஆட்களும் திருக்குளம்.


enkeyem
மார் 04, 2025 15:18

லஞ்சம் கொடுத்து குறுக்குவழியில் அரசு வேலை பெற பேராசைப்பட்ட அந்த நபரையும் கைது செய்யுங்கள்


V.Mohan
மார் 04, 2025 14:54

ஐயா, போலீஸ்கார் அவர்களே அரசு வேலை தருவதாக மோசடி செய்த இருவரா கைது ஓகே டி.என்.பி.எஸ்.சி. எழுதி நல்ல மார்க்கில் பாஸ் செய்தவர்கள் லிஸ்டில் உள்ளவர்களிடம் யார் பணம் அதிகம் தருகிறார்களோ அவர்களுக்கு வேலை என்று பேரம் பேசும் அமைச்சர்கள்/உதவியாளர்கள், டிபார்ட்மெண்ட் தலைவர்கள் இவர்களைப் பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?? புதிதாக வேலையில் சேர்ந்தவர்களிடம் விசாரித்து அந்த நபர்களை கைது செய்தால் விடியலின் வெளிவேசம் கலையும் செய்வீங்களா??


Miki Chellam
மார் 04, 2025 12:22

madurai nagamalai pudhukottaila oruthan viveknu irukan avanayum pudingasir


Natarajan Ramanathan
மார் 04, 2025 10:16

லஞ்சம் கொடுத்தவரையும் கைது செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை