ஒரே ஆண்டில் இரு மாநாடுகள்
தமிழக வெற்றிக் கழகம், விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டுக்குப் பின், கட்சித் தலைவர் விஜயை, உண்மையான எதிர்க்கட்சி தலைவராக மக்கள் ஏற்று கொண்டனர். அடுத்ததாக மதுரையில் நடக்கவிருக்கும் மாநாடு முடிந்த பின், மக்கள் அவரை முதல்வராகவே ஏற்றுக் கொள்வர். வரும் 2026ல், தமிழகத்தில் அமையப் போகும் ஆட்சி, பெண்களுக்கு முக்கியத்துவமும்; உரிமையும் அளிக்கும் ஆட்சியாக இருக்கும். மற்ற கட்சிகள், மாநாட்டிற்கு பஸ், வேன், கார் ஏற்பாடு செய்து மக்களையும், தொண்டர்களையும் அழைத்து வருவர். ஆனால், த.வெ.க., மாநாட்டிற்கு மட்டும் தான் தொண்டர்கள், நடந்தே வருவர். ஒவ்வொரு கட்சியும் ஒரு மாநாடு நடத்தினால், அடுத்த மாநாட்டுக்கு ஒரு வருட காலத்துக்கு மேல் ஆகும். ஆனால், த.வெ.க., மட்டும் தான், ஒரே வருடத்தில் இரு பிரம்மாண்ட மாநாடுகளை நடத்துகிறது. மதுரை மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டதில் இருந்தும் இருபதாயிரம் பேர் வருவர். ஆனந்த், பொதுச்செயலர், த.வெ.க.,