உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்; துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்; துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தியோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இரண்டு பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர். நாடு பிரிவினையின்போது, ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியை உரிமம் கொண்டாடி, நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=efyufvfj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுடன் இணைவதற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அடிக்கடி போராட்டங்கள் நடந்து வருகின்றன. வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவற்றில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாராபாதில் நேற்று மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால், அங்கு சந்தைகள், கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்துடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பாக்., அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கங்கள் எழுப்பினர்; பேரணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டசபை தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும்; மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் என, 38 அம்ச கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் பாக்., அரசு நிறுத்தியுள்ளது. மக்கள் அணி திரள்வதை தடுக்க, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாக்., ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்து உள்ளனர். இதன் காரணமாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போர்க்களமாக மாறியுள் ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சாமானியன்
செப் 30, 2025 11:11

பிரதமர் மோடிஜி தக்க சமயத்தில் மிகச்சிறந்த முடிவுகளை எடுப்பார் என நிச்சயமாக நம்புகிறேன்.


R. SUKUMAR CHEZHIAN
செப் 30, 2025 10:22

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், கில்கிட் பல்ட்டிஸ்தான் மற்றும் பலுஜிஸ்தான் பகுதிகளை மீட்க பாரத பிரதமர் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம், அந்த பகுதி மக்கள் சீக்கிரமாக சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.


chandrakumar
செப் 30, 2025 07:35

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் உண்மை நிலையினை உணர துவங்கிவிட்டனர். இந்த தருணத்தை இந்திய அரசு சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்


Muralidharan raghavan
செப் 30, 2025 10:38

தேவை இல்லை என்று நினைக்கிறேன். இப்படித்தான் வங்கதேசத்திற்கு உதவி சுதந்திரம் பெற்று கொடுத்தோம். அவர்களுக்கு நன்றி உள்ளதா? எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மக்கள் எக்கேடு கேட்டால் நமக்கென்ன ?


Dv Nanru
செப் 30, 2025 07:26

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி 22 பேர் படுகாயம்.. பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் எப்பொழுது சிறைக்கு செல்வார்கள் என்று தெரியவில்லை காரணம் இதுவரை பாகிஸ்தானில் இருந்த பிரதமர்கள் அனைவருமே சிறையில் தான் இருந்தார்கள் இப்பொழுதும் இம்ரான் கான் சிறையில் தான் இருக்கிறார்.. மிக விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை இந்தியா மீட்டெடுக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை அதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் சிந்தூர் தாக்குதல் மூலம் ஏன் இன்னும் பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ளவில்லை மீண்டும் சித்தூர் தாக்குதல் தொடர வேண்டுமா அப்படி தொடர்ந்தால் பாகிஸ்தான் பஞ்சு பஞ்சாக பறந்து விடும்.. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர் அதேபோல் அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது அதனால் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் பேரணிகள் போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடத்துகின்றனர்.. இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் அகதிகளாக ஒதுக்கப்பட்ட 12 தொகுதிகளை ரத்து செய்யவும் மானிய விலையில் கோதுமை மாவு மற்றும் நியாயமான மின்சார கட்டணமும் மற்றும் 38 அம்ச கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்.. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பாகிஸ்தான் அரசு பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது இது பாகிஸ்தான் அரசின் கையாலாகாத தன்மையை வெளிப்படுத்துகிறது... ஜெய்ஹிந்த்...


புதிய வீடியோ