உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை சின்னம் விவகாரம்; தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம்; தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'இரட்டை இலை சின்னத்தை பழனிசாமிக்கு ஒதுக்கியது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அவ்வாறு சின்னத்தை ஒதுக்கியதன் வாயிலாக, மிகப்பெரிய சட்டச் சிக்கல் எதிர்காலத்தில் ஏற்படலாம்' என, தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி புகழேந்தி, டில்லி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேற்று வந்து, ஒரு மனு அளித்தார்.

சேதாரம்

மனு குறித்து அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க., கட்சி மற்றும் சின்னம் குறித்த விவகாரத்தில் சிவில் கோர்ட் எடுக்கும் முடிவுதான் இறுதியானது என உச்ச நீதிமன்றம், இரட்டை இலை தொடர்பான வழக்கில் தெரிவித்துள்ளது. தெரிந்தோ தெரியாமலோ, தேர்தலில் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டது.ஒருவேளை எதிர்காலத்தில் சிவில் கோர்ட்டின் தீர்ப்பு, பழனிசாமி தரப்புக்கு எதிராக அமைந்துவிட்டால், இப்போது சின்னத்தை தந்ததன் வாயிலாக, மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதாரத்தை எதைக் கொண்டும் சரிசெய்ய முடியாது. எனவே, இரட்டை இலையை பழனிசாமி தரப்புக்கு கொடுத்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தவறு செய்து விட்டது. இருந்தபோதும், கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் தோற்று விட்டது. இதற்கு, தேர்தல் ஆணையத்தின் தவறான முடிவும் ஒரு காரணம்.இதைத்தான், தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்திருக்கும் மனுவில் தெரிவித்துள்ளோம்.அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்துதான், தேர்தல் தொடர்பான அனைத்து பாரங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.கட்சியின் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலும் அனைத்து பதவிகளையும் ஒதுக்கி, இருவரும் சேர்ந்துதான் கையெழுத்திட்டுள்ளனர்.

சிறப்பு அமர்வு

தற்போது, ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்பதை தேர்தல் ஆணையம் ஏற்று அங்கீகரித்தால், பெரும் சட்ட சிக்கல் ஆகிவிடும். அந்த சிக்கலை தீர்க்க, அரசியலமைப்பு சிறப்பு அமர்வு கூடிதான், விசாரிக்க வேண்டியிருக்கும். அப்படியொரு கேள்வி, கோர்ட்டில் எழுப்பப்பட்டால், தற்போது அ.தி.மு.க,வின் பல்வேறு பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவருடைய பதவிகளும் கேள்விக்குறி யாகும் நிலை உருவாகும். இதையும், மனுவில் சுட்டிக்காட்டியுள்ளோம்.இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரிக்க, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகிறார். அது தவறு. தேர்தல் ஆணையம் நினைத்தால், கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும்; கொடுத்த சின்னத்தை வாபஸ் பெற முடியும். தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்றால், சி.வி.சண்முகம், மிக மூத்த வழக்கறிஞர்களுடன் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது ஏன்?தேர்தல் ஆணையம், வெறும் குமாஸ்தா பணியைத்தான் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. முழு அதிகாரம் உடைய அமைப்பு.எனவே, இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு முன், கட்சிக்காக பாடுபட்ட அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும். பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரிடம் பேசும் பொறுப்பு என்னுடையது.இவ்வாறு புகழேந்தி கூறினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை