உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் பணிகள் முடிக்கப்பட்ட இரு பகுதிகள்; பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் இன்று அர்ப்பணிப்பு

விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலையில் பணிகள் முடிக்கப்பட்ட இரு பகுதிகள்; பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் இன்று அர்ப்பணிப்பு

விக்கிரவாண்டி : விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில், பணிகள் முடிக்கப்பட்ட இரு பகுதி சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் மோடி இன்று அர்ப்பணிக்கிறார் .விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 179.5 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை (என்.எச்.332ஏ) அமைக்க மத்திய அரசு 6,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இப்பணிகளை விரைந்து முடிக்க 4 கட்டங்களாக பிரித்து பணிகளை மேற்கொள்ள 'நகாய்' ஒப்பந்தம் செய்தது. முதற்கட்டமான, விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து புதுச்சேரி மாநிலம், எம்.என்.குப்பம் வரை (0-29 கி.மீ.,) மூன்றாம் கட்டமான 57 கி.மீ., துாரத்திற்கு பூண்டியாங்குப்பம் முதல் மயிலாடுதுறை மாவட்டம் சட்டநாதபுரம் வரை (67-123.8 கி.மீ.,) பணிகள் நடந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இரண்டாம் கட்டமான 38 கி.மீ., துாரமான (29-67கி.மீ.,), எம்.என்.குப்பம் முதல் கடலுார் பூண்டியாங்குப்பம் வரை பணிகள் முடிந்து மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தாலும். சிறு பணிகள் நிலுவையில் உள்ளதால் இரண்டாம் கட்ட சாலையை தற்காலிகமாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க முடியவில்லை. 1,600 கோடி ரூபாய் மதிப்பில் முதல் இரு கட்டபணிகளை திலீப் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்தாரும், மூன்றாம் கட்ட பணியை 2,566 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்டெக்ருரல் இன்ஜினியரிங் நிறுவனத்தார் செய்து முடித்துள்ளனர்.முதல் கட்டமான 29 கி.மீ., துாரத்திற்கு கெங்கராம்பாளையத்திலும், மூன்றாம் கட்டமான 57 கி.மீ., துாரத்திற்கு கொத்தட்டையிலும் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டு வாகனங்களில் டோல்கேட் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலையில் பணிகள் முடிக்கப்பட்ட இரு பகுதிகளை, ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி இன்று (6ம் தேதி) மதியம் 12:45 மணிக்கு நடைபெறும் பாம்பன் பால திறப்பு விழாவின் போது, காணொலி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து திறந்து வைக்கிறார்.பிரதமர் நான்கு வழிச்சாலைகளை திறப்பதையொட்டி, பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் வழி நெடுகிலும் உள்ள மேம்பாலங்கள், ஆற்றுப்பாலங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தேசிய கொடி வண்ணத்தில் சீரியல் விளக்குகள் எரிய விட்டுள்ளனர்.விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் முதல் மூன்றாம் கட்ட துாரமான 123.8 கி.மீ., துாரம் வரை மக்கள் சங்கடமின்றி எளிதாகவும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விழாவில் கவனர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய ரயில்வே, செய்தி மற்றும் ஒளிபரப்பு தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முருகன், தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி.,க்கள் நவாஸ்கனி, தர்மர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

xyzabc
ஏப் 06, 2025 11:47

இந்த நவாஸ் கனிக்கு இங்கே என்ன வேலை? அல்பம். மோடி சார் உங்களுக்கு நன்றி. திராவிட ஆட்சியில் நாகப்பட்டினம் ஒதுக்கப்பட்ட வூர் ஆகி விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை