உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்

போலீஸ் ஸ்டேஷன் விவகாரத்தில் உதயகுமார் கைது: நயினார் நகேந்திரன் கண்டனம்

சென்னை: போலீஸ் ஸ்டேஷன் சூறையாடப்பட்ட விவகாரத்தில், அங்கு சென்று பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் சூறையாடப்பட்ட காவல்நிலையத்தைப் பார்வையிடச் சென்ற தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான உதயகுமார் தமிழக காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் நிலையத்திற்குள் துணிச்சலாக நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளைத் தடுக்கத் தவறிய காவல்துறை, அதைப் பார்வையிட செல்லும் அரசியல் தலைவர்களைக் கைது செய்வது என்பது அராஜகம் மட்டுமன்றி கடும் கண்டனத்திற்குரியது.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜூன் 14, 2025 17:32

காவல் நிலையத்திற்குள் துணிச்சலாக நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய குற்றவாளிகளைத் தடுக்கத் தவறிய காவல்துறை, அதைப் பார்வையிட செல்லும் அரசியல் தலைவர்களைக் கைது செய்வது கையாலாகாத திராவிட மாடல் அரசின் இறுமாப்பே ஆகும் யாரை எப்போது எதற்காக எங்கே கைது செய்ய வேண்டும் என்று நன்றாக தெரிந்து செய்வதுதான் திராவிட மாடல் ஆடல் அரசின் சித்தாந்தம்


சமீபத்திய செய்தி