உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்மையான சனாதனம் உதயநிதி துணை முதல்வரானது தான்; சீமான் விமர்சனம்

உண்மையான சனாதனம் உதயநிதி துணை முதல்வரானது தான்; சீமான் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் மதுரை எய்ம்ஸூக்கு அடிக்கல் நாட்டியதாகவும், அதன் பிறகு 9 ஆண்டுகள் ஆட்சியிருந்தும் மருத்துவமனையை கட்டாதது ஏன் என்றும் தி.மு.க.,வுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.ம.பொ.சி.யின் 29ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றங்களை நான் ஏற்கவில்லை. முதல்வராக கருணாநிதி இருக்கும் போதும் சரி, இப்போது ஸ்டாலின் இருக்கும் போதும் சரி, தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதி திராவிட நலத்துறையை தவிர்த்து வேறு எந்தத் துறையும் வழங்கப்படவில்லை. தலித் மக்களின் வாக்குகள் என் பக்கம் திரும்புகிறது என தெரிந்தவுடன், உயர்கல்வித்துறையை கொடுத்திருக்காங்க. அதுவும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் நடைபெற இருப்பதால், இப்ப இதை பண்ணியிருக்காங்க.தலித் எம்.எல்.ஏ.,க்களுக்கு பிற துறையை கொடுப்பதாக இருந்திருந்தால், கருணாநிதி ஆட்சியில் கொடுத்திருக்க வேண்டும். அல்லது, நீங்க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த உடனே கொடுத்திருக்க வேண்டும். ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து, உயர்கல்வி மற்றும் பால்வளம் என அடுத்தடுத்து துறையை மாற்றுவதால், அந்தத் துறையை எப்படி செழுமையாக வைத்திருக்க முடியும்.ஓட்டுக்களை கவனத்தில் வைத்தே இதுபோன்று செய்வது என்ன மாதிரியான சமூக நீதி? 2026 சட்டசபை தேர்தலில் தலித் வேட்பாளர்களுக்கு, தி.மு.க., எத்தனை பொதுத் தொகுதிகளை கொடுக்கப் போகிறது என்பதை பார்க்கத் தான் போகிறோம்.சமூக நீதி மற்றும் சனாதன எதிர்ப்பு என வாய்கிழிய பேசக் கூடாது. சனாதனமே உங்கள் வீட்டில் இருக்கிறது. அப்பறம் எப்படி நாட்டில் எதிர்ப்பீர்கள். கருணாநிதியின் மகன் என்பதை தவிர்த்து ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க என்ன தகுதி இருக்கிறது. அதேபோல, ஸ்டாலின் மகன் என்பதை தவிர்த்து உதயநிதிக்கு, துணை முதல்வராக என்ன தகுதி இருக்கிறது. இதுதான் உலகிலேயே கொடிய சனாதனம்.கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற பிறப்பினாலேயே துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு கொடுத்திருப்பது தான் உண்மையான சனாதனம். போன முறை 39 எம்.பி.,க்களும், இந்த முறை 40 எம்.பி.,க்களையும் வைத்து என்ன செய்றீங்க. மதுரை எய்ம்ஸை கட்ட சொல்ல வேண்டியது தானா? இருந்த ஒரு செங்கல்லையும் எடுத்துட்டுப் போய்ட்டீங்க. இது என்ன பெரிய புரட்சியா?இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

V S Narayanan
அக் 09, 2024 16:45

Let Seeman talk sensibly.


V S Narayanan
அக் 09, 2024 16:43

See man Seeman. As if youre well informed and self acquainted person in all areas of politics, your immatured talks are not accep at all to any common person.


Srinivasan Krishnamoorthi
அக் 04, 2024 11:10

பல நேரம் சர்ச்சை பேச்சு பேசும் சீமான் தேவை இல்லாமல் சந்தானம் பற்றி பேசுகிறார்.


muthu
அக் 04, 2024 09:49

தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றங்களை நான் ஏற்கவில்லை. சீமான் Who are you useless to reject when governor gave oath of office to Hon Ministers


Sathyanarayanan Sathyasekaren
அக் 03, 2024 22:09

சொத்துக்கு மதம் மாறிய சைமனுக்கு சனாதனம் குறித்து என்ன தெரியும்? முதலில் இவருக்கு எதை பற்றி முழுமையக தெரியும் என்பதே சந்தேகம். தொண்டை கிழிய ஏதாவது கத்திகொண்டே இருக்கவேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 03, 2024 19:28

பரம்பரையாக பதவி சுகம் அனுபவிப்பதை சனாதனத்துடன் எப்படி ஒப்பிடலாம் ????


sankaran
அக் 03, 2024 18:15

என்ன கதறினாலும் , 2026 இல் மீண்டும் தீயமுக ஆட்சியே ..


vadivelu
அக் 03, 2024 20:13

அது உண்மை. 32 % வாக்குகள் தி மு க விடம்தான் இருக்கு . அண்ணா தி மு க 18%, பா க 15 %, சீமான் 12% விஜய் 10 % , பா ம க 5%, தே மு தி க 5% , ஓ பி எஸ் + டீ டீ வி 3% என்று பிரிந்து இருக்கே. இதில் சிறிய மாற்றத்தில் கூட்டணி அமைந்தால் தி மு க எதிர் கட்சி ஆகி விடும்.


சோழநாடன்
அக் 03, 2024 17:57

சீமான் வாங்குன காசுக்கு மேல கூவுறாப்புல..... நல்ல வருவ சீமான்


அப்பாவி
அக் 03, 2024 17:51

இது திராவிட சனாதனம். இது ஓக்கே. வீணாப்.போட்டு குழப்பிக்காதீங்க.


Guruvayur Mukundan
அக் 03, 2024 17:08

எல்லா விஷயத்துக்கும் சநதனதே பிடிச்சு இழுத்துகிட்டு வரலே நா, நம்ம அதி புத்திசாலி அண்ணனுக்கு தூக்கம் வராது. ஜனங்க எல்லாம் அவரே பொறுத்தே வர லூசு, முட்டாளுங்க.நிலையான உண்மை / eternal திருத்த. இதை மனுஷன் எங்கெல்லாம் கொக்கி போட்டு வம்பு செயறது இவருக்கு ஒரு வழக்கம்மாகவே போச்சு.


புதிய வீடியோ