உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதிக்கு அரசியல் தெரியாது: இபிஎஸ் பதிலடி

உதயநிதிக்கு அரசியல் தெரியாது: இபிஎஸ் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு : அதிமுக கட்சி அலுவலகம் அமித்ஷா வீட்டில் இயங்குகிறது என சொல்லும் துணை முதல்வர் உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பு இல்லை.தெரிந்திருந்தால் அப்படி பேசியிருக்க மாட்டார்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இபிஎஸ் பேசியதாவது:தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்கிறார் முதல்வர். எப்போதோ தலைகுனிந்து விட்டது. உங்கள் கட்சிக்காரர் செய்த 2ஜி ஊழல் வெளி வந்தபோதே தமிழகம் தலைகுனிந்துவிட்டது. திமுக ஆட்சியில் இருந்தும் எதுவுமே செய்ய முடியவில்லை, மக்கள்தான் ஏமாற்றம் அடைந்துவிட்டனர், ஓட்டுப்போட்ட மக்களை மறந்த கட்சி திமுக. அதிமுக ஆட்சி கடனில் தத்தளிப்பதாக ஸ்டாலின் சொன்னார். அதிமுக ஆட்சியில் சாலை, பாலம், குடிமராமத்து, கடன் தள்ளுபடி என பல திட்டங்கள் கொடுத்தோம், திமுக ஆட்சியில் எந்தத் திட்டமும் இல்லை ஆனால் கடன் மட்டும் வாங்குகின்றனர். டிஜிபி பட்டியலை மத்திய அரசு அனுப்பியும் இன்னும் திமுக அரசு நியமிக்கவில்லை, எப்படி சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கும்? இவர்களுக்கு யார் வேண்டியவரோ, அவரது பெயர் வரும்வரை காத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி டிஜிபி நியமனம் இருக்க வேண்டும் அதையும் இந்த அரசு பின்பற்றவில்லை.அதிமுக கட்சி அலுவலகம் அமித் ஷா வீட்டில் இயங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி பேசியிருக்கிறார். ராயப்பேட்டையில் தான் அதிமுக அலுவலகம் இருக்கிறது. நீங்களும் உங்க அப்பாவும் திட்டம் போட்டீர்கள். அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்குவதற்குத் திட்டம் போட்டீர்கள். சில பேர் தூண்டுதலின்பேரில் அடித்து நொறுக்கினார்கள். அதை சாக்காக வைத்து அலுவலகத்துக்கு சீல் வைத்தீர்கள். ஆனால், அந்த சீலை அதிமுக உடைத்தெறிந்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருணாநிதி காலத்தில் திமுக இரண்டாக உடைந்தது, கருணாநிதி ஒருபக்கம், வைகோ ஒருபக்கம். அப்போது அந்த கட்சியை கைப்பற்ற முயற்சித்தனர், அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்த கட்சி அதிமுக. மறந்துவிடாதீர்கள், உங்களைப்போல எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணம் இல்லை, சக்கரம் சுழல்கிறது, கீழே உள்ள சக்கரம் மேலே வரும். அதிமுக ஆட்சி வந்ததும் பதிலடி கொடுப்போம். உதயநிதிக்கு அரசியல் தெரிய வாய்ப்பே இல்லை, அப்படி தெரிந்திருந்தால் இப்படி பேசமாட்டார்.பிரதமரை எத்தனை முறை தமிழகத்துக்கு அழைத்து வந்தீர்கள். உங்கள் மீது நடவடிக்கை பாயக்கூடாது என்பதற்காக நடித்த நாடகம் எல்லாம் வெளுத்துவிட்டது. கேலோ இந்தியா விழாவுக்கு பிரதமரை அழைத்து வந்து உதயநிதி நடத்தினார். அப்போது அவர் நல்ல பிஎம். அதேபோல் செஸ் ஒலிம்பியாட் நடத்த வரும்போது நல்ல பி.எம். கலைவாணர் அரங்கில் மத்திய அரசு திட்டம் நடத்தியபோது நல்ல பிஎம், இப்போது தேர்தல் வந்தால் மட்டும் மோசமான பிஎம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
அக் 11, 2025 01:23

வடிவேலு படத்தில் வரும் நகைச்சுவை மாதிரி அவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான். அரசியல் தெரியாது. சுட்டுப்போட்டாலும் வராது.


Easwar Kamal
அக் 11, 2025 00:33

உதயநிதிக்கு அரசியலும் தெரியாது நடிக்கவும் தெரியாது. எழுதி கொடுத்ததை நல்ல பிட் பபேருல எழுதி வச்சு படிபனுவ.


Rajah
அக் 10, 2025 22:27

நடிகரும் துணை முதல்வருமான உதயநிதிக்கு அரசியல் தெரியாது என்று இபிஎஸ் சொல்வது சரியானதே.சந்தானத்தோடு சேர்ந்து அடித்த மொக்கை காமெடிகளையே அரசியலிலும் செய்கின்றார். காமெடி என்று நினைத்து நாகரீகமற்ற முறையில் பேசுகின்றார். எல்லோரும் எம்ஜிஆர் போலாகுமா? அவர் நீண்ட கால அரசியல் அனுபவத்தோடு பல பதவிகளை வகித்து முதலமைச்சர் ஆனவர்.இவர் வாரிசு அடிப்படையில் குறுகிய காலத்தில் துணை முதல்வர் ஆனவர். இவரை போலவே எவ்வித அரசியல் அனுபவம் இல்லாமல் விஜய் முதல்வராக நினைப்பதில் தவறில்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை