உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி நடிப்பில் வெளியாகும் நீட் தேர்வு படம் ஓடாது

உதயநிதி நடிப்பில் வெளியாகும் நீட் தேர்வு படம் ஓடாது

தமிழக சட்டசபை, இன்று ஸ்டாலின் சபையாகி விட்டது. முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட, தலைவர்கள் பேசிய சட்டசபையில், இன்றைய நிலை என்ன, ஜனநாயகம் எங்கே போனது. இன்றைக்கு கருத்து சுதந்திரத்திற்கு, மிகப் பெரிய பேராபத்து வந்திருக்கிறது. தீர்மானம் கொடுத்து 10 நாட்களாக போராடுகிறோம். அனுமதிக்க காலம் தாழ்த்துவது ஏன்?தி.மு.க., நாடகங்களுக்கு, மேடையாக சட்டசபை பயன்படுகிறது. இன்றைக்கு முதல்வரும், துணை முதல்வரும், நீட் தேர்வு விவகாரத்தில் 'செலக்ட்டிவ் அம்னீசியா'வால் பாதிக்கப்பட்டிருப்பரோ என மக்கள் சந்தேகம் கொள்ளத் துவங்கியுள்ளனர். நீட் தேர்வு குறித்து, 2025 ஜன.,10ல் சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டார். உடனே, 'மத்திய அரசுதான், நீட் தேர்வை ரத்து செய்ய முடியும்' என முதல்வர் பேசினார். பிறகெதற்கு அனைத்துக் கட்சி கூட்டம்? ஸ்டாலின் தயாரித்து, உதயநிதி நடித்து, வெளியிடுகிற 'நீட் தேர்வு' படம் ஓடாது.உதயகுமார், முன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை