உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; ரேணுகாதேவி 6 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க பேட்டி!

காளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; ரேணுகாதேவி 6 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க பேட்டி!

திண்டுக்கல்: 'கணவருக்கு விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போனதால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். கருணை அடிப்படையில் ரேஷன் கடை விற்பனையாளர் வேலை வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் ரேணுகாதேவி என்பவர் மனு அளித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்ற ரேணுகாதேவி. இவர் சிறுவயதிலிருந்து 165 வாடிவாசல்களில் காளைகளை அவிழ்த்துள்ளார். மேலும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளார். தற்போது, இவருக்கு திருமணமாகி மூன்று வயது மற்றும் ஆறு மாதம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் சிவாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு கால் நரம்பு செயல் இழந்தது. இதனால் அவர் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.தங்களின் குழந்தைகளை வளர்க்க முடியாமலும், தற்போது வளர்த்து வரும் இரண்டு காளைகளுக்கு உணவளிக்க முடியாமலும் இருந்து வருகிறேன் என கண்ணீர் மல்க மாவட்ட கலெக்டரிடம் ரேணுகாதேவி என்பவர் மனு அளித்துள்ளார். அவர், 'கருணை அடிப்படையில் எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளிக்க வந்துள்ளேன். எனக்கு இந்த பணியினை வழங்கி எனது வாழ்வாரத்தை பாதுகாக்க வேண்டும்' என நிருபர்களிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஸ்ரீ ராஜ்
டிச 02, 2024 23:33

தினமலர் குழுமத்திற்க்கு, அந்த குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியுமானால் அவர்களுக்கு எங்களால் ஆன உதவியை செய்ய முடியும். தயவு கூர்ந்து அவர்களின் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை இங்கே பகிரவும். நன்றி.


rama adhavan
டிச 02, 2024 22:53

காளைகளை விற்று விடலாம். ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் பணக்காரர்கள். ஜல்லிக்கட்டில் வென்றவர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், பீரோ, தங்க நகைகள், பாத்திரங்கள் பரிசு கொடுப்பவர்கள். நாமும் லைவ் ஒளிபரப்பிப்பில் பார்த்து இருக்கிறோம். அவர்கள் இக் குடும்பத்திற்கு உதவலாமே?


Shunmugham Selavali
டிச 02, 2024 17:39

உடனடியாக அரசு போருள் மற்றும் மருத்துவ உதவி செய்ய வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் வேலை கொடுத்து வாழ்வாதாரம் நிலைபெற செய்ய வேண்டும்.


Jay
டிச 02, 2024 15:40

விபத்துகளில் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வருடம் 20 ஆயிரம் பேர் வரை இறக்கிறார்கள். மேலும் பல ஆயிரம் பேர் கை இழப்பு, கால் இழப்பு போன்று அன்றாட வேலைகளை செய்ய இயலாத அளவிற்கு காயம் அடைகிறார்கள். தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினை என்றால் விபத்துகளில் நேரிடும் இழப்புக்கள் தான். இதை குறைக்கும் வகையில் சமீபத்தில் இருந்த அரசுகள் நடந்து கொள்ளவில்லை. உதாரணத்திற்கு குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவது, முறையாக ஓட்டுநர் தேர்வு வைக்காமல் லைசென்ஸ்கள் கொடுப்பது, சரியான ரோடுகள் இல்லாதது என முக்கியமான பிரச்சனைகளை சரி செய்யும் நோக்கத்தில் செயல்படுவதில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு சென்னையில் இருந்து சேலம் ரோடு போடுவதை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியது. சமீபத்தில் ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளுமே சாராய வியாபாரத்தில் மறைமுகமாக வருமானம் பார்ப்பதால் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை அவ்வளவு தூரம் கவனிப்பதில்லை. இந்த செய்தியில் ஒரு தாயின் கண்ணீர் பற்றி போடப்பட்டுள்ளது. இதுபோன்று பல்லாயிரம் தாய்மார்கள் தொடர்ந்து தங்கள் குடும்ப ஆதாரத்தை இழந்து கொண்டு வருகிறார்கள். மக்கள் சற்று சிந்தித்து ஓட்டு போட்டால் நமக்காக சிந்திக்கும் அரசு அமைந்தால் மட்டுமே இப்படிபட்ட பிரச்சனைகளை உற்று நோக்குவார்கள். ஓட்டுக்கு காசு வாங்குவதால் கேள்வி கேட்கும் தகுதியை பொதுமக்கள் இழந்து விடுகிறோம். அதேபோன்று பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்களும் முறையான பதில் சொல்லாமல் கேள்விகளை திசை மாற்றி விடுகிறார்கள். சிந்தித்து ஓட்டு போட்டால் நமக்கான நல்லதை நாம் எதிர்பார்க்கலாம்.


Indian
டிச 02, 2024 14:11

கருணையோடு அரசு உதவிட வேண்டும் .


Ramesh Sargam
டிச 02, 2024 12:36

இவர் போல பலர் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு, அரசு தன்னால் முடிந்த உதவிகளை செய்துதரவேண்டும். ஒருவருக்கு மட்டும் செய்து போட்டோசூட் நடத்தி விளம்பரம் செய்வதை தவிர்க்கவேண்டும்.


சமீபத்திய செய்தி