வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பேசாமல் குஜராத்தில் உள்ளபடி ஏரிவாயுவை குழாயில் கொடுத்தால் லாரி தொல்லையும் இல்லை, காஸ் ஏஜென்சியும் இல்லை, டெலிவரி பாய் லஞ்சமும் இல்லை. 12, 24 சிலிண்டர் அரசியலும் இல்லை.
எக்ஸ்டரா income போயி விடுமே
சென்னை: 'லாரிகள் வேலை நிறுத்தம் நடக்கும் நிலையில், காஸ் சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடக்கும்' என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கை: தென் மண்டல எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட்டர்களின் வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்களிடம், போதுமான காஸ் சிலிண்டர்கள் இருப்பு உள்ளன. எனவே, வினியோகம் தடையின்றி நடக்கிறது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தொடர்ந்து பேச்சு நடக்கிறது. புதிய ஒப்பந்தப்புள்ளி விதிகள், அரசு மற்றும் மத்திய கண்காணிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேம்படுத்துவதற்காக, புதிய வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.சில டிரான்ஸ்போர்ட்டர்கள் பாதுகாப்பு விதிகளுக்கான அபராதங்களை நீக்க கோரியுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என, தெரிவித்துள்ளன.தற்போது வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடக்கும் என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்; வீடு மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் வினியோகம் வழக்கம் போல் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பேசாமல் குஜராத்தில் உள்ளபடி ஏரிவாயுவை குழாயில் கொடுத்தால் லாரி தொல்லையும் இல்லை, காஸ் ஏஜென்சியும் இல்லை, டெலிவரி பாய் லஞ்சமும் இல்லை. 12, 24 சிலிண்டர் அரசியலும் இல்லை.
எக்ஸ்டரா income போயி விடுமே