உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் விபத்து: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:மத்திய அமைச்சர் நட்டா பயணித்த கார் சக்கரத்தின் அலாய் டிஸ்க் கழன்று விழுந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசின் மீது பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.அவரது அறிக்கை:மக்கள் நலப் பணிகளில் தொடரும் தமிழக அரசின் மெத்தனப் போக்கும்,அலட்சியமும் கவனக்குறைவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்திற்கு வருகை புரிந்த மத்திய சுகாதாரத் துறைஅமைச்சரும் பா.ஜ., தேசியத் தலைவருமான நட்டா நிகழ்ச்சியை முடித்துவிட்டு டில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் விரைந்த போது, வண்டலூர்-மீஞ்சர் சாலை அருகே அவர் பயணித்த கார் பழுதடைந்து சிறு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.முக்கியத்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஒரு மாநிலத்திற்கு வருகை தரும்போதெல்லாம் அந்தந்த மாநில அரசுகள் தான் அவர்களுக்கு தங்குமிடம்,போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு, அளிக்க வேண்டிய கடமை உடையது. ஆனால்விருந்தினர்களைப் போற்றும் தமிழர் மரபு, திமுக மாடலில் இல்லை போலும்.நட்டா மே 4 அன்றுமாலை தமிழகத்திற்கு வருகை தந்திருந்த போது, வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு சென்று திரும்பினார்.அப்போது வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் திருமுடிவாக்கம் அருகே கார்சென்றபோது நட்டா பயணம் செய்த காரில் இருந்த அலாய்சக்கரத்திலிருந்து அலாய் டிஸ்க் கழன்று விழுந்து வாகனங்கள் மீது மோதிவிபத்து ஏற்பட்டது. ஓட்டுனரின் திறமையால் மத்திய அமைச்சரும் நானும் உயிர்தப்பினோம்.கோடிகளை இறைத்து நிரப்பிய செக்யூரிட்டி உபகரணங்களுடன், பளபளக்கும்பாதுகாப்பு வாகனத்தில் பயணிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழகத்திற்கு வருகை தரும் மத்தியஅமைச்சர்கள், மற்ற கட்சித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், ப்ரோட்டோகால் வாகனங்களையும் வழங்க வேண்டியது திமுக அரசின் தலையாய கடமை என்பது தெரியாதா? அல்லது தனது குடும்ப வாரிசுகளைத் தவிர வேறு எவருடைய பாதுகாப்பையும் முதல்வர் முக்கியமெனக் கருதவில்லையா?எதிலும் எல்லாவற்றிலும் நம்பர் ஒன் என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசின்பஸ்கள் ஓடும் போதே வண்டிகளின் பாகங்கள் கழன்று விழும் நிலை இருக்கிறது என்பது மக்கள் அறிவார்கள். அதிர்ஷ்டவசமாக அவ்விபத்தில் மத்திய அமைச்சர் அவர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதும், பாதுகாப்பிற்காக பின்னால் தொடர்ந்த மற்றொரு மாற்று காரில் அவர் பத்திரமாக விமான நிலையம் சென்று டில்லி புறப்பட்டு விட்டார் என்பதும் ஆறுதல் அளிக்கிறது.ஆனால் இம்முறை நட்டாவுக்குவழங்கப்பட்டிருந்த வாகனம், மிகப்பெரும் பழமையானதும் பயன்படாததும்,பாதுகாப்பற்றதாகவும் இருந்தது ஆளும் தமிழக அரசுக்கு தெரிந்து நடக்கிறதா? அல்லது மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பில் குறைபாடுகள் அனுமதிக்கப்படுகிறதா? அல்லது தமிழக அரசின் மெத்தனப்போக்கா? அல்லது அலட்சியமா? அல்லதுகவனக்குறைவா? என்ற கேள்விகள் எழுகிறது.ஆகவே மத்திய அமைச்சர்களுக்கும் முக்கிய தலைவர்களுக்கும் பாதுகாப்பினைஉறுதி செய்யும் வகையில், பாதுகாப்பு வாகனங்களின் மற்றும் பாதுகாவலர்களின்தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.ஓட்டுனரின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்ட விபத்தின் காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்று இனியும் எந்தவிதமான தவறுகள் நடைபெற வண்ணம் காண நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பா.ஜ., சார்பில் வலியுறுத்துகிறோம்.திமுக அரசு வழங்கிய பழுதடைந்த ப்ரோட்டோகால் வாகனத்தால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் பாதுகாப்பிற்கு ஏதேனும் பங்கம்விளைந்திருந்தால் தமிழக வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாக அதுபதிந்திருக்கும். திமுக அரசின் இந்த பொறுப்பற்ற செயலால் தமிழகத்தின் மீதும் களங்கம் ஏற்பட்டுள்ள இந்நிலைக்கு முதல்வர் ஸ்டாலின்பொறுப்பேற்று மக்களுக்கு தகுந்த விளக்கமளிக்க வேண்டுமெனவலியுறுத்துகிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Seyed Omer
மே 05, 2025 17:35

டிஸ்க் கழன்று ஓடி இருந்தால் கார் கவிழ்ந்து இருக்கும் டிஸ்க் கின் பிளாஸ்டிக் கவர் கழன்று இருக்கும் பா.ஜ பொய் சொல்லுவதில் வல்லுநர்கள்


venugopal s
மே 05, 2025 12:02

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு!


GMM
மே 05, 2025 10:04

தமிழகம் யார் கட்டுபாட்டில் என்று நிரூபிப்பது கடினம். தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகம் மாநிலம் வருகை தரும் போது மாநில நிர்வாகம் தங்குமிடம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு, அளிக்க வேண்டிய கடமை தவறும்?. கடமை ஆள் பார்த்து தான் செயல் படும். இனி மத்திய அரசு அமைச்சர்கள் பாதுகாப்பை சட்டம் ஒழுங்கு சீர் கெட்ட மாநிலங்களில் தானே ஏற்பாடு செய்வது நல்லது. இந்திரா கொலை முயற்சி, ராஜிவ் படுகொலை கோவை தொடர் குண்டு, சிலிண்டர் குண்டு.. நடந்த இடம் எது?


பாமரன்
மே 05, 2025 08:29

சக்கரத்தில் இருந்து அல்லாய் டிஸ்க்... புரியலை... அல்லாய் டிஸ்க் அதாவது வீல் கழண்டு போயிருந்தா பெரிய விபத்து ஆகியிருக்கும்... அனேகமாக வீல் கவர் கழண்டு விழுந்திருக்கும்..அது அலங்கார பொருள்... வண்டி முன்னாடி தொங்க விடும் எலுமிச்சை பழம் மாதிரின்னும் சொல்லலாம்... அது விழறதால எந்த ஆபத்தும் கிடையாது... வீல் கழண்டிருந்தா மத்திய அரசு பெரிய லெலவில் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும்... நைனைவை யாரோ கலாய்ச்சி விட்டிருக்காங்க.. பாவம்... நம்ம தள பகோடாஸ் மாதிரி வெவரந்தெரியாமல் வாயை விட்டுட்ட மாதிரி இருக்கு...


அப்பாவி
மே 05, 2025 08:25

அடடே... இன்னும் தமிழக அரசு குடுக்கும் ஓசி வாகனங்களில் தான் வலம் வராங்களா? நாலு கோடி நைனாவுக்கு சொந்தமா கார் இல்லியா? எல்லோரும் ஓசி.


மூர்க்கன்
மே 05, 2025 07:12

கேடிகளை லிஸ்ட் எடுத்தா ஒன்னு சொல்றேன் காசி ..தமிழ் ...


ramani
மே 05, 2025 06:29

திராவிஷ அரசிற்கு ப்ரோடோகால் என்றால் என்ன என்று தெரியாது.. அவர்களுக்கு தெரிந்தது ஊழல் ஊழல் ஊழல் மட்டுமே. அதை எப்படி மறைப்பது என்பது மட்டுமே


Kasimani Baskaran
மே 05, 2025 04:02

தீம்க்காவை ஆளவிட்டு வேடிக்கை பார்த்தல் அதுதான் நடக்கும். வீட்டுக்கு அனுப்பி கேடிகளுக்கு சுளுக்கெடுக்க வேண்டும்.


Anantharaman Srinivasan
மே 05, 2025 00:15

சக்கரத்திலிருந்து அலாய் டிஸ்க் தானே கழன்று விழுந்தது. சக்கரமே கழன்று விட்டது போல குதிக்கிறீங்களே என்று சொல்லக்கூடும்.


Oviya Vijay
மே 04, 2025 23:30

தமிழக மக்களுக்கு பிரயோஜனமே இல்லாத ஒரு கட்சி என்றால் அது பாஜக தான்...


முக்கிய வீடியோ