வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த தலைமுறையில் சான்ஸ் இல்லை என்று தோணுது
ஓசூர்:''தமிழகத்தில் வரும் காலங்களில், பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும்,'' என, மத்திய ரயில்வே துறை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில் மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை மையம் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, முன்னதாக மேற்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்திலும் வரும் காலங்களில் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், உலக அளவில் இந்தியா மிகப்பெரிய நாடாக வளர்ந்து வருகிறது. ஓசூரில் மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் எளிதில் பயன்படுத்த முடியும்.தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது. ஓசூர்-ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டம் தொடர்பாக, துறை சார்ந்த அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, அத்திட்டம் வர நடவடிக்கை எடுக்கப்படும். தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பது தொடர்பாவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தலைமுறையில் சான்ஸ் இல்லை என்று தோணுது