உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் பேச்சு: ஸ்டாலின், இ.பி.எஸ்., உதயநிதி கண்டனம்

மத்திய அமைச்சர் பேச்சு: ஸ்டாலின், இ.பி.எஸ்., உதயநிதி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபாபா, 'தமிழகத்தை சேர்ந்தவர்கள் வந்து, எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போடுகின்றனர். அவர்களை தடுப்பது இல்லை' என, சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு, தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலின்: மத்திய அமைச்சர் ஷோபாபாவின் பொறுப்பற்ற பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். இதை கூறுபவர், தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புடன் நெருக்கமான தொடர்புடையவராக இருக்க வேண்டும். இத்தகைய கூற்றை கூற, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.பா.ஜ.,வின் பிளவுபடுத்தும் பேச்சை, தமிழர்களும், கன்னடர்களும் புறக்கணிப்பர். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபாபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரதமர் முதல் தொண்டர்கள் வரை, பா.ஜ.,வில் உள்ள அனைவரும் இத்தகைய பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை, உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த வெறுப்பு பேச்சை, தேர்தல் கமிஷன் கவனத்தில் வைத்து, உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தமிழக மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷோபாபாவின் வெறுப்பு பேச்சுக்கு என்னுடைய கடும் கண்டனம்.இதுபோன்ற பிரிவினைவாத பேச்சுகளை, இனியும் யாரும் பேசாத வகையில், தேரத்ல் கமிஷன் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின்: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக, மத்திய அமைச்சர் ஷோபாவின் விஷமத்தனமான அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்து வரும் நிலையில், பா.ஜ., அமைச்சர் அபத்தமான கருத்தை தெரிவித்துள்ளார். என்.ஐ.ஏ., இவரையும் விசாரிக்க வேண்டும். அவரது இந்த வெறுப்புப் பேச்சுக்காக, அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Thamizhan
மார் 28, 2024 10:52

பாதிக்கப்பட்டவங்க குண்டு வச்சவங்களப்பத்தி பேசுறாங்க இதுல போத மற்றும் சாராயத்தை விற்கும் கயவாளி dvd பசங்க கண்டிக்க என்ன இருக்கு இதுபோதாதுன்னு மதசார்பின்மை போர்வையில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கயவாளிப்பசங்க திராவிட பசங்க இதுல பேச்சு வேற


venugopal s
மார் 20, 2024 17:27

இதை எதிர்த்து தமிழக பாஜக தலைவர்கள் ஒருத்தர் கூட வாயைத் திறக்க வில்லையே! அட மானஸ்தர்களா!


NicoleThomson
மார் 20, 2024 21:30

இதை எழுதுவதற்கு முன்னர் பல்லை இளித்துக்கொண்டு செக் வாங்கினார்கள் அல்லவா, அதற்கான தன்னிலை விளக்கம்? இன்னமும் விளக்கம் கொடுக்கவில்லை என்றால் அவர்களும் ஜாபர் கூட்டாளிகள் என்ற பெயர் ஓடுகிறதே அது நிஜம் தானா?


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 20, 2024 12:44

தமிழகத்தில் குண்டுவெடிப்புக்களை செய்தவர்கள் யார்???? வரலாற்றின் கரும்புள்ளி எங்கே, யார் மீது இருக்கிறது???? "நாம் அனைவரும் தமிழர்கள் .... ஆரியனை விரட்டுவோம் ..... மதமெனப்பிரிந்தது போதும்" என்று தமிழனிடம் சொல்பவர்கள் யார் ???? குண்டு வைப்பவர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்கிறது வரலாறு.. எங்களது ஷரியத் படி தண்டனை கொடுங்கள் என்று கேட்கமாட்டார்கள்... அண்ணா பிறந்தநாள் என்று கூறி விடுவிப்பதும் தமிழகத்தின் கலாச்சாரம்... அதை ஒட்டி தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.. பயங்கரவாதத்தை வாக்குகளுக்காக ஊக்குவித்தால் அதை நாலு பேர் குறை சொல்லத்தான் செய்வார்கள் .....


Apposthalan samlin
மார் 20, 2024 10:38

அண்ணாமலை எதாவது வாயே துறந்தால் நாளா இருக்கும் இது பிஜேபி யின் வோட்டை பாதிக்கும் தமிழ் இனத்தை வைத்து பேசி இருக்க கூடாது .


Lion Drsekar
மார் 20, 2024 10:33

கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடிபட்டால் கூட நாங்கள் பயப்படமாட்டோம் , நீதிமன்றத்தில் வாதாடி நியாயம் எங்கள் பக்கம் என்று நிரூபிப்போம் . எந்த தணிக்கை துறையாக இருந்தாலும் சரி , எந்த அரசு துறையாக இருந்தாலும் சரி, அப்படி இருக்க இந்த செய்திக்கு நாங்கள் சும்மா விடமாட்டோம், வந்தே மாதரம்


aaruthirumalai
மார் 20, 2024 10:08

யாருக்குமா இந்த ஆப்பு...


Sampath Kumar
மார் 20, 2024 09:56

ஐதுறூம்பவர்து பொய் சொல்லுவதே டாப் டு போட்டோம் கொள்கையாக கொண்ட கவி கும்பலிடம் வேறு என்னஎதிர் பார்க்க முடியும் இந்த ஆத்தாவை தமிழ் நாட்டுக்குள் வர விட கூடாது தமிழர்கள் ஓன்று சேர்ந்து விரட்ட வேண்டும் தரித்திரம் பிடித்த மூதேவி


N.Purushothaman
மார் 20, 2024 09:32

குண்டு வைக்கிறவனுங்களுக்கு மதம் இல்லைன்னு உருட்டுறவனுங்க தானே இவனுங்க ....இப்போ என்ன திடீர்ன்னு தமிழர்கள் மீது பாசம் இருக்குற மாதிரி ஓங்கோல் வந்தேறிங்க கூவுதுங்க ?


செந்தமிழ் கார்த்திக்
மார் 20, 2024 10:30

Shame on you. Don't ever say- you are Tamilan.


N.Purushothaman
மார் 20, 2024 13:40

பார்ரா ... உண்மைய சொன்னால் திருட்டு திராவிட கட்சி அனுதாபிக்கு எரியுது போல .... எதை சொல்லணும் எதை சொல்ல கூடாதுன்னு சொல்ல நீங்க அறிவுரை வழங்க வேண்டிய அவசியம் இல்லை .....


N.Purushothaman
மார் 20, 2024 09:29

சனாதனத்தை பத்தி பேசிட்டு இந்தியாவுல இருக்குற அம்புட்டு நீதிமன்றத்திலும் வழக்கு பதிவாகி இருக்கும் நிலையில் மன்னிப்பு கேக்க வக்கில்லாதவனுங்க இதுக்கு கருத்து முந்திகிட்டு வந்திடறானுங்க .....


செந்தமிழ் கார்த்திக்
மார் 20, 2024 09:06

நான் பலமுறை கூறியுள்ளேன். , மற்ற மாநிலத்தில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் எல்லாம் அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறிதேனும் நன்மை செய்ய பாடுபடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள பாஜக கட்சியினர், தமிழநாட்டு மக்கள் பக்கம் நிற்க மாட்டார்கள்., தமிழர்களுக்கு எதிராக மட்டும் தான் நிற்பார்கள். தமிழர்களை கேவலமாக பேசுவோர்களுக்கு முட்டு கொடுப்பார்கள். அதனாலே பாஜக அக்கட்சி தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க முடிவதில்லை.முதலில் என் தாய் மொழி, இரண்டாவது என் இனம், இதை எவன் ஒருவன் விட்டு கொடுக்கிறானோ அவர்களுக்கு எப்போதும் மரியாதையே கிடையாது. தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்கவே கூடாது. அதற்கு பிறகு தான் தேச பக்தி எல்லாம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ