உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு தனி அடையாள எண்; ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு விதிப்பு

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்; ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு விதிப்பு

சென்னை : 'விவசாயிகள் தனி அடையாள எண் பெற, உரிய ஆவணங்களை வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, வேளாண் துறை கெடு விதித்துள்ளது.நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் எண் போல, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசின், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட, விவசாயிகள் பதிவு, நிலம், பயிர் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி, தமிழகம் முழுதும் மின்னணு முறையில், விவசாயிகள் விபரம் சேகரிக்கப்படுகிறது. இதற்காக, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பணியை, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிட்டா, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போனுடன் சென்று, விபரங்களை பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, வரும் காலங்களில், மத்திய அரசு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள், பிரதமரின் விவசாய உதவித்தொகை, பயிர் கடன், கிஸான் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இப்பணியை முடித்தால், மத்திய அரசிடம் இருந்து, தமிழக வேளாண் துறைக்கு, 1,200 கோடி ரூபாய் கிடைக்கும்.எனவே, இம்மாதம் 31ம் தேதிக்குள், விவசாயிகள் தங்கள் விபரங்களை தாக்கல் செய்து, தனி அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என, வேளாண் துறை விவசாயிகளுக்கு கெடு விதித்துள்ளது. தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, ஏப்ரல் முதல் மானிய உதவி, கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாது என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

GMM
மார் 24, 2025 11:10

pmkisan.gov.in - என்ற தளத்தில் பதியலாம்? ஆதார், மொபைல் எண் தேவை. இது நில ஆவணம், ஆதார், பான், மொபைல், உரிமை போன்றவற்றை இணைத்து விடும். தமிழகம் உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற சிறப்பு சட்டம் மூலம் விவசாய நிலங்கள் அபகரிப்பு மாநிலம்? ஆகவே தமிழக அதிகாரிகள் பக்குவமாக, பிழை இல்லாமல் விவசாய எண் வழங்க நாடுக .


Siva Kumar
மார் 24, 2025 11:09

இரண்டு எல்லையில் இடம் இருந்தால் எப்படி வாங்குவது


Ray
மார் 24, 2025 07:56

இந்த நாட்டு மக்களுக்கு பாக்கெட் முழுக்க இன்னும் எத்தனை எத்தனை அட்டைகள்தான் வைத்துக் கொள்ள சொல்வார்கள்? இன்னொரு tongue cleaner


l.ramachandran
மார் 24, 2025 07:19

இது ஒரு ஏமாற்று வேலை. மற்ற எல்லா மாநிலங்களின் இணையத்தளங்களில் விவசாயி தனது ஆவணங்களை சமர்ப்பித்து இந்த எண்ணை பெற்றுக்கொள்ளாலாம். ஆனால் தமிழ்நாட்டு இணைதளத்தில் இந்த வசதி முடக்கப்பட்டுள்ளது. இந்த எண்னை பெற இ சேவை மையமோ அல்லது சம்பந்தப்பட்ட்ட துறை அலுவலகமோ செல்ல வேண்டும். எதற்கு என்பதை புரிந்துகொள்ள்ளுங்கள்.


Kayd
மார் 24, 2025 07:12

தலை முண்டும் இடுப்புல நைந்த அரைஞாண் ல கட்டிய கோவணமும் வெறும் காலும் வெயிலில் கருகிய உடம்பும்... எவன் எவனோ குடித்து உடைத்து போட்ட கண்ணாடி பாட்டில் துண்டு மேல் வெறும் காலில் நடந்து.. பாம்பு இருக்குமா தேள் இருக்குமா முள் குத்தமா என்று தெரியாத இடத்தில் சேறு ல கை வச்சு உன் தட்டில் சுடு சோறு போட்டு தான் பழைய கஞ்சி ய குடித்து நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் இவுங்க.. இவுங்க கோவணத்த ஏ‌ற்கனவே உருவி விட்டு ஆடு மாடுக்கு சூடு வைத்து நம்பர் போடுவாங்க அது தான் ஞாபகம் வருது..


Varadarajan Nagarajan
மார் 24, 2025 06:48

இத்திட்டத்தின்கீழ் விபரங்களை முறையாக பதிவுசெய்ய தமிழகத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஒவொரு கிராமம் வாரியாக சென்று விவசாயிகளின் விபரங்களை பதிவுசெய்யவேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருந்தும் அதை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை. பெயரளவில் ஒருநாள் செய்துவிட்டு மூட்டைகட்டிவிட்டனர்


மணி
மார் 24, 2025 06:27

நாசமா போகுது நாடு உருப்படி இல்லமா


N Sasikumar Yadhav
மார் 24, 2025 06:48

உங்க பினாமி சொத்துக்கள் வெளியே தெரிந்துவிடுமென்ற பயமா


kartik
மார் 24, 2025 06:22

website link , contact number, pl


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை