உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவம்: சிறப்பு குழுவினர் இன்று முதல் விசாரணை

பல்கலை மாணவி பாலியல் வன்முறை சம்பவம்: சிறப்பு குழுவினர் இன்று முதல் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து, சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், 37, கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயருடன், முதல் தகவல் அறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கில், ஞானசேகரனுடன் மேலும் சிலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேஹ பிரியா, ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் நகர துணை கமிஷனர் பிருந்தா ஆகியார் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.இந்தக் குழுவினர் இன்று முதல் விசாரணையை துவங்க உள்ளனர். அதற்கு முன், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில், இதுவரை இவ்வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை விபரங்கள் மற்றும் ஆவணங்கள், சிறப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஞானசேகரன், அவரது மனைவியர் உள்ளிட்டோரிடம் தனித்தனியே, சிறப்பு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். அத்துடன், முதல் தகவல் அறிக்கையில், மாணவியின் பெயரை சேர்த்த போலீஸ் அதிகாரிகள், அவை சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்தவர்கள் என, 14க்கும் மேற்பட்டோருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர். இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது:சிறப்பு புலனாய்வு குழுவினர், இன்று முதல் விசாரணையை துவங்க உள்ளதாக தெரிகிறது. அவர்களிடம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மனு, குற்றவாளி அளித்த வாக்குமூலம், நாங்கள் மேற்கொண்ட விசாரணை அறிக்கை என, அனைத்தும் ஒப்படைக்கப்படும். சிறப்பு குழு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்புக்கு பேராசிரியைகள் குழு

அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்த 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழக கவர்னர், உயர்கல்வி துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மாணவ - மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, கவர்னரும், அமைச்சரும் உத்தரவிட்டனர்.அத்துடன், பல்கலை வளாகத்திற்குள் வெளியாட்கள் வருவதை கட்டுப்படுத்துவது, வளாகத்தை துாய்மையாக வைத்திருப்பது, மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இரவிலும் இயங்குவது உள்ளிட்டவற்றை உறுதி செய்யும்படி, பல்கலை பேராசிரியர்கள் சங்கத்தினர், கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்நிலையில், மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, பேராசிரியைகள் 16 பேர் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காலை 6:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை 49 பேர்; பிற்பகல் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை 49 பேர்; இரவு, 10:00 முதல் காலை 6:00 மணி வரை, 42 பேர் என, 140 காவலாளிகள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தவிர, மேலும், 40 காவலாளிகளை சேர்த்து, பாதுகாப்பை பலப்படுத்தவும், வளாகத்தில் ஏற்கனவே உள்ள, அனைத்து, 'சிசிடிவி' கேமராக்களையும் இயங்க வைப்பதுடன், கூடுதலாக, 30 கேமராக்கள் பொருத்தவும் பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இரவில், மாணவ - மாணவியர், விடுதிகளில் இருந்து வெளியே செல்ல தடை விதிக்கவும், அவர்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

AMLA ASOKAN
டிச 30, 2024 13:57

நல்ல வேலை இந்த குற்றவாளி ஞானேஸ்வரன். அப்துல் காதர் , சாகுல் ஹமீத் என்று இருந்திருந்தால் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் அண்ணாமலையின் தென்னைமர சவுக்கடி பாய்ந்திருக்கும் . அவருக்கும் சுய சவுக்கடி தேவை பட்டிருக்காது .


Ganapathy
டிச 30, 2024 13:45

திமுக மிகப்பெரிய ஜனநாயக அச்சுறுத்தலாக மாறி வருவது உண்மை. அதே நேரத்தில் இதெற்கெல்லாம் காரணமான கட்டுபாடற்ற ஒழுங்கற்ற கேவலமான பொதுவில் நடந்த அசிங்கமான இந்த மாணவி மற்றும் மாணவரின் பாலின உறவு நடவடிக்கையை சட்டம் கொடுத்த உரிமையின் பின் ஒளிந்து கொண்டு ஆதரிப்பதும் மிகப்பெரிய தவறு. தான் மாவிடாயில் இருக்கும் ஞானம் அந்த மாணவிக்கு ஞானசேகரனை பார்த்த பின்தான் வந்தந்ததா? தனது பெற்றவர் மரியாதையும் தனது குடும்ப மானமும் சுத்தமாக மறந்தே விட்டதா? தான் படிக்க வந்ததும் பெற்றோர் அதற்காக படும் கஷ்டங்களும் மறந்து விட்டதா? இது எதுவுமே தான் தனது காதலருடன் பாலின உறவு நடவடிக்கையை செய்தபோது சுத்தமாக மறந்து விட்டதா? அண்ணா பல்கலைக்கழக பெயர் கெட்டதற்கு அவர்களின் ஒழுகக்கேடான நடவடிக்கைகளும் காரணம். இன்று கதை வேறுவிதமாக போனவுடன் தங்களை அப்பாவிகளா காட்டுவது மக்களையும் சட்டத்தையும் ஏமாற்றும் செயலாகும். தங்களது காமக்களியாட்டங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக புதர்தான் கிடைத்ததா இவர்களுக்கு? இந்த கண்ராவி காமக்களியாட்ட கருமத்தை தனது வீட்டிலோ அல்லது ஏதாவது ஹோட்டலிலோ செய்திருந்தால் யாருக்குமே தெரிந்திருக்காதே. எனவே தங்களது நடவடிக்கைகள் மூலமாக குற்றம் நடக்க தூண்டுதலாக இருந்த இந்த மாணவர்களும் சூழ்நிலை குற்றவாளிகளே. இந்த நடுநிலை இல்லாவிட்டால் ஒரு பயனும் மக்களுக்கு கிடைக்காது இந்த விவகாரத்தின் விசாரணயில்.


xyzabc
டிச 30, 2024 13:11

இதற்கான ஊர்வலங்கள் எல்லா வூர்களிலும் நடக்க வேண்டும். தி மு க ஆட்சி கவிழும் வரை தொடரனும்.


Kanns
டிச 30, 2024 12:36

SHAME


sivakumar Thappali Krishnamoorthy
டிச 30, 2024 11:44

தமிழக போலீஸ் துறை ஏன் Governer வசம் இருக்க வேண்டும். கொஞ்சம் மரியாதை கிடைக்கும் .


Rajarajan
டிச 30, 2024 11:12

இனி சார் என்று பொதுவெளியில் பேசவே பயமாக உள்ளது. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி. சார், ஆடி கார், இன்னொருவன், பிலைட் மோடில் ரிங்க்டோன் , இவையெல்லாம் என்ன ??


தமிழன்
டிச 30, 2024 14:13

முதல்வர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்காதது.. துணை முதல்வர் மாணவர்களை சந்தித்து பேசாமல் தயங்கி பதுங்கி இருப்பது, கல்வி துறை அமைச்சர் எதுவுமே தெரியாதது போல இருப்பது.. இதெல்லாம் என்ன? கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியாக வரும்.. வரவில்லை என்றால் வர வைப்பார்கள்


NaamIndian
டிச 30, 2024 11:05

யாரு அந்த Rolex?


NaamIndian
டிச 30, 2024 10:55

யாரு அந்த Rolex Sir?


AMLA ASOKAN
டிச 30, 2024 10:43

இந்த சம்பவம் நடந்த பின் தான் யூனிவர்சிட்டி துணை வேந்தர், பதிவாளர் மற்றும் டீன்கள் உறக்கத்திலிருந்து விழித்துள்ளனர். வீட்டை பூட்டாமல் சென்றால் திருடன் வருவான் என்பது இப்பொழுது தான் தெரிகிறதோ? கற்பழித்தவனும் குற்றவாளி , அதை தடுக்கத் தவறியனும் குற்றவாளி தான் . விசாரணையில் அனைத்தும் அம்பலமாகிவிடும் .


pandit
டிச 30, 2024 10:35

சாரு.....??


தமிழன்
டிச 30, 2024 13:08

எலுமிச்சம் பழ சாறு பற்றியா கேட்கறீங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை