உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்

பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம்

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இன்றைய அறிவியல் காலகட்டத்தில் எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறது. அப்படி முறையாக இல்லாத இடத்தில் விபத்துக்களைத் தவிர்க்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்றும் வசதியும் இருக்கிறது. குறைந்தபட்சம் மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் ஆகியவையாவது வைத்திருப்பார்கள்.தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் காட்சிகள் படப்பிடிப்பு நடக்கும் போது முறையான பாதுகாப்பு உபகரணங்கள், அவசர பாதுகாப்புக் குழுவினர், ஆம்புலன்ஸ், மருத்துவக் குழு ஆகியவற்றை வைத்து நடத்துவதில்லை என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த 'சர்தார் 2' சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது ஏழுமலை என்ற ஸ்டன்ட் கலைஞர் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து அகால மரணமடைந்தார். அப்போதே ஸ்டன்ட் காட்சிகளின் படப்பிடிப்பின் போது முறையான பாதுகாப்பு வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று திரையுலகிலும், சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் எழுப்பினார்கள். ஆனால், அது நடந்த நான்கு மாதங்களுக்குள் மீண்டும் ஒரு விபத்து, மீண்டும் ஒரு ஸ்டன்ட் நடிகர் அகால மரணமடைந்துள்ளார்.பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'வேட்டுவம்' படத்தின் ஸ்டன்ட் காட்சி படப்பிடிப்பில் மோகன்ராஜ் என்ற ஸ்டன்ட் நடிகர் அகால மரணமடைந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அப்படப்பிடிப்பில் முறையான பாதுகாப்பு வைத்து நடத்தினார்களா என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.'சர்தார் 2, வேட்டுவம்' ஆகிய படப்பிடிப்புகளில் ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் அடைந்துள்ளது ஸ்டன்ட் கலைஞர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கதாநாயகர்களுக்கு 200 கோடிக்கும் மேல் சம்பளம் தரும் தயாரிப்பாளர்கள் அவர்களது படங்களின் படப்பிடிப்புகளில் முறையான பாதுகாப்பு வைத்தும், மருத்துவக்குழு வைத்தும் படப்பிடிப்புகளை நடத்துவதில்லை என்று பலரும் குமுறுகிறார்கள்.மரணமடைபவர்களுக்கு சில லட்சம் நிவாரண நிதி என தயாரிப்பாளரோ, நடிகரோ கொடுத்துவிட்டு அத்துடன் அவர்களது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் மனக்கஷ்டத்திற்கு யாருமே ஆறுதல் சொல்ல முடியாது. இனி வரும் காலங்களில் இப்படியான விபத்துகள் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டும் அல்லது அரசு தலையிட வேண்டும் என ஸ்டன்ட் கலைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.இதனிடையே நாகை மாவட்டம், விழுந்தமாவடி ஊரில் நடந்த படப்பிடிப்புக்கு மூன்று நாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். நான்காவது நாளில் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சுலைமான்
ஜூலை 15, 2025 20:16

P.ரஞ்சித் சினிமா இயக்க தடை விதிக்கப்பட வேண்டும். கொலை குற்றத்திற்கான தண்டனையை பின்னர். ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளருக்கு வழங்க வேண்டும்.


Rathna
ஜூலை 15, 2025 20:07

பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கும் நடிக நடிகையர்கள், நடிகர் சங்கம் மற்ற சினிமா சங்கங்கள் இறந்த குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும்.


Rajalakshmi
ஜூலை 15, 2025 17:43

பா .ரஞ்சித் போன்ற அர்பன் naxal -க்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். திரையில் மட்டுமே pretentious ஆக தாட் பூட் குப்பை கதைகள் .


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 16:44

தெலுங்கு சினிமா நடிகர் கோட்ட ஸ்ரீனிவாசராவ் மரணம் பிறகு சரோஜா தேவி மரணம் . ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டண்ட் நடிகர்கள் மரணம். அப்போ நிச்சயம் கடவுள் ஏதோ பிலிம் தயார் செய்கின்றார் என்று அர்த்தமாகின்றது இந்த கலி காலத்தில்


NRajasekar
ஜூலை 15, 2025 15:22

இவனுக செய்யும் கஞ்சா இப்பொழுது மரணம் பாதுகாப்பு குறை இதை திசைதிருப்ப ஜாதியை எடுப்பானுக


NRajasekar
ஜூலை 15, 2025 15:20

இவனுக செய்யும் பல தவறுகளை மறைக்க


sridhar
ஜூலை 15, 2025 14:32

யார் கேட்டார்கள் இந்த மட்டமான ஜாதி வெறி படத்தை . தேவை அற்ற உயிர் பலி .


Velu
ஜூலை 15, 2025 14:03

சேப்டி இல்லாத கார் கலை பயன்படுத்துவதூ காரணம் 100 வாங்கும் ஹீரோ ஒரு புதிய கார் கலை பயன் படுத்த வேண்டும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 13:58

தொழில்துறையில் - Industries - விபத்துக்கள் ஏற்பட்டால் பாய்ந்து குதறும் அரசுகள், காவல்துறை இதில் இறங்கி கைது செய்யவே யோசிப்பது ஏன் >>>>


Padmasridharan
ஜூலை 15, 2025 13:54

திரைப்பட சங்கம் பாலியல் தொல்லைகளுக்கு தண்டனைகள் அறிவித்தார்களே, அதுபோல் இதற்கும் அறிவிக்கட்டும். . பெண் மானத்தை காக்க புறப்படும்போது ஏன் ஆண் உயிரென்ன சும்மாவா. .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை