உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறுதி மூச்சு இருக்கும் வரை... அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி

இறுதி மூச்சு இருக்கும் வரை... அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பெற்றோரின் மண விழாவிற்கு மகன் வரவில்லை என்றால் தந்தைக்கு எப்படி இருக்கும். மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் எனக்கு அழைப்பு இல்லை. தமிழக மக்களுக்கு தொண்டு செய்த, எந்த தலைவர்களையும் கொச்சைப்படுத்த கூடாது.

இது பிரச்னை அல்ல

இது அரசியல் கட்சி நடத்தும் எல்லோருக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த கூடாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும். தேவைப்படும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். பா.ம.க.,வை நான் வளர்த்தது போல் இந்தியாவில் யாரும் இல்லை. அன்புமணி மன்னிப்பு கேட்கிறாரா? இல்லையா? என்பது பிரச்னை அல்ல.

மூச்சு இருக்கும் வரை....!

பா.ம.க.,வில் நிலவும் பிரச்னை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம். எல்லா பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு; அந்த முடிவு இன்னும் வரவில்லை. நான் தொடங்கிய கட்சியை 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்தேன். நான் சென்ற முறை சொன்னேன். மீண்டும் சொல்கிறேன். பா.ம.க.,வை வளர்த்தது நான் தான். மூச்சு இருக்கும் வரை கட்சிக்கு தலைவராக செயல்படுவேன்.

நல்ல பொறுப்புகள்

கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின், அப்போது முணு முணுக்க வில்லை. கட்சியில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளே கொடுத்து இருக்கிறேன். நான் புதிதாக அளித்த பொறுப்புகள் எல்லாம் நிரந்தரம் தான். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.ஜி.கே. மணியின் மகன் மற்றும் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அன்புமணி ஏன் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு, ''யாம் அறியேன் பராபரமே, யாம் அறியேன் பராபரமே, யாம் அறியேன் பராபரமே'' என ராமதாஸ் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ganesun Iyer
ஜூன் 26, 2025 17:37

கருணாநிதி வழி, கடைசிவரைக்கும் தானே தலைவன்...


Oviya Vijay
ஜூன் 26, 2025 15:34

ஷோக்கா இருக்கிது நைனா... வரவர வியாழக்கிழமை வந்தாலே இப்போலாம் பயமாகீது பா... இவர் தான் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெட்டி சாரி பேட்டி கொடுக்கிறவராச்சே... இவிங்களோட ஒரே குஷ்டம் சாரி கஷ்டமப்பா... கம்பேர் பண்ணலாம்... அதுக்காக இத்துனூனு துக்கடா கட்சிய வெச்சுகினு திமுக மாதிரி இம்மாம் பெரிய கட்சியோடவா கம்பேர் பண்ணுறது... இது எல்லாம் ராங்கு பா... கட்சிக் கூடாரமே காலியாகப் போகுது பா... அம்புட்டு தான். சொல்லிப்புட்டேன்... ஜாக்கிரதை... சூதானமா நடந்துக்கோ நைனா...


Tiruchanur
ஜூன் 26, 2025 15:02

உன்னோட இறுதி மூச்சு வரைக்கும் தானே.


subramanian
ஜூன் 26, 2025 14:46

மீடியாக்கள், வாசகர்கள் எல்லோரும் பாமக குறித்து ரெண்டு வாரத்துக்கு இவர்களை பற்றி செய்தி போடாம இருந்தால், அவர்கள் அமைதியாக இருப்பார்கள்.


Kulandai kannan
ஜூன் 26, 2025 14:11

குடும்ப அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒழிந்தால்தான் உண்மையான ஜனநாயகம் பிறக்கும்.


HoneyBee
ஜூன் 26, 2025 13:53

தன் மக்களை விலை பேசி விற்பனைக்கு வைக்கும் இந்த ஜோக்கர்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 26, 2025 13:47

வயதிற்கு தகுந்த பேச்சும், செயலும், நிதானமும் இல்லை அகம்பாவமும், அதிகாரமும் தான் மேலோங்கி இருக்கிறது.... இவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆட வன்னியர்கள் என்ன இவரின் அடிமைகளா ??? பேசாமல் கட்சியை அன்புமணியிடம் ஒப்படைத்து கடைசி காலத்தை அமைதியாக கழிப்பதே இவருக்கு நல்லது....!!!


V RAMASWAMY
ஜூன் 26, 2025 13:16

செயல்பட விடமறுக்கிறீர்களே, செயல் தலைவர் அன்புமணி அவர்கள் உறுதியோடு வயதான தலைவரை, தந்தையாக இருந்தாலும் வீட்டுக்கு அனுப்புமணியாக இருக்கவேண்டும்.


Nagarajan D
ஜூன் 26, 2025 13:02

உன் கட்சியை வேறு யாரு வளர்க்கணும்... நீயும் உன் மகனும் மட்டுமே தலைவரா இருக்கணும் என்று நினைக்கிற உன்னை என்ன செய்ய... அது சரி யாருடைய இறுதி மூச்சு இருக்கும் வரை... எனக்கு தெரிஞ்சு உன் கட்சி உன் இறுதி மூச்சுக்கு முன்னரே இறுதி மூச்சை நிறுத்திவிடும்..


Narayanan
ஜூன் 26, 2025 12:42

76000 கிராமங்களில் சென்று கட்சியை வளர்த்து என்ன பயன் ? தனித்து நிற்க முடியவில்லை . பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி நடத்தி பெட்டி வாங்கி தன் குடும்பத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு வளர்ந்த கட்சி பாமக . ஜாதீய அடிப்படையில் கட்சி வளர்த்த எல்லோரும் ஜாதியை முன்னேற்றவில்லை .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை