உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க ஆடை ஏற்றுமதி குறைகிறது; கன்டெய்னர் லாரி உரிமையாளர் கவலை

அமெரிக்க ஆடை ஏற்றுமதி குறைகிறது; கன்டெய்னர் லாரி உரிமையாளர் கவலை

திருப்பூர்; அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆடை வரத்து குறைந்து, வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாக, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகள், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் அனுப்பி வைக்கப்படுகிறது. மிகக்குறைவான அளவு மட்டுமே சென்னை துறைமுகம் வழியாக செல்கிறது. திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் ஆடைகள், துறைமுகத்தில் உள்ள சரக்கு முனையங்களில் இறக்கப்படும். அங்கிருந்து, வேறு கன்டெய்னருக்கு மாற்றி, கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. தொழில் சீராக நடந்து வந்த காலகட்டத்தில், திருப்பூரில் இருந்து தினமும், 200 லாரிகள் துாத்துக்குடி சென்று வரும். அவற்றில், அமெரிக்க ஏற்றுமதி ஆடைகளுக்காக, 30 முதல், 35 கன்டெய்னர் லாரிகள் தினமும் இயக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவின் இறக்குமதி வரி, 50 சதவீதமாக உயர்த்திய பின், கன்டெய்னர் லாரிகள் இயக்கம் குறைந்துவிட்டது. இது குறித்து, கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'அமெரிக்கா ஏற்றுமதிக்காக, தினமும், 30 - 35 லாரிகள், துாத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்தன. ஆனால், வரி உயர்வுக்கு பின், 4 - 5 லாரிகள் மட்டுமே திருப்பூரில் இருந்து செல்கின்றன. வரி உயர்வு ரத்தாகும் வரை, ஏற்றுமதியும் குறையும். எனவே, மத்திய அரசு, போர்க்கால அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுப்பது தற்போதைய அவசியம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை