உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க வரியால் பாதிப்பு; வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

அமெரிக்க வரியால் பாதிப்பு; வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள வர்த்தகத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.இது குறித்து பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9qrkgoyi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். தற்போதைய 25% வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்னை குறித்து பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். தமிழக ஜவுளித்துறையில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட துறைகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Gopalakrishna Kadni
ஆக 17, 2025 11:26

இவர் ட்ரம்பை பார்த்து திராவிட மாடல் அமெரிக்கால கொண்டு வர சொல்லுங்க. அப்போது எல்லாம் சரியாகி விடும்


xyzabc
ஆக 17, 2025 08:34

வாஷிங்டன்க்கு அனுப்பினால் வரி குறைந்துவிடும். தமிழகத்தின் கடன் சுமையை அப்பறம் பேசிக்கலாம்.


Rajasekar Jayaraman
ஆக 16, 2025 22:05

முனா பூனாவின் ஆலோசனை இல்லாவிட்டால் மோடி ஏமாந்துபோய் சிக்கலில் மாட்டி இருப்பார்.


theruvasagan
ஆக 16, 2025 21:57

அந்த அஞ்சு பொருளாதார புலிகளை கூட்டியாந்து. கமிட்டி போட்டு தமிழ்நாட்டு பொருளாதாரத்தை எவரஸ்ட் சிகரம் லெவலுக்கு உயர்த்திட்டீங்களே. அவங்களை ஒன்றிய அரசுக்கு கடனா குடுக்கறதுதானே. அவங்க ஐடியா குடுத்து இந்தியாவை முதல் இடத்துல தூக்கி வச்சுருவாங்க.


venugopal s
ஆக 16, 2025 21:40

சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்தால் ஒரு கருத்துக்கு இரண்டு ரூபாய் என்பதை கூட்டி விட்டார்கள் போல் தெரிகிறது!


vivek
ஆக 16, 2025 21:57

அட வீணா போன வேணு ரெண்டு ரூபா.அதிகமா இல்லை இருநூறு ரூபாய் அதிகமா....பாவம் உன் குடும்பம்...இந்த இருநூறு பத்துதா


sankaranarayanan
ஆக 16, 2025 21:28

சபாழ் நல்ல முயற்சி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி விட்டார் இனி அமெரிக்க அதிபர் டிராம்பே தலை குனிந்து அடிபணிந்து திராவிட மாடல் அரசுக்கு மதிப்பு கொடுத்து வரியை நீக்கிவிடுவார் என்ன கற்பனையடா அமரிக்க அதிபரின் அடுத்த சந்திப்பு இந்த திராவிட மாடல் அரசின் முதல்வருடன்தா-னாம் மோடியுடன் அல்ல அல்ல அல்ல


Ramesh Sargam
ஆக 16, 2025 19:43

உங்களுடைய ஆட்சியில் அந்த பாழாப்போன டாஸ்மாக் சரக்கால் மக்களுக்கு எவ்வளவு பாதிப்பு? அதை தடுப்பதை விட்டுவிட்டு, அமெரிக்க வரியால் பாதிப்பு என்று கடிதம் எழுத போய்விட்டார்,மக்களை திசைதிருப்ப.அமெரிக்க வரி விதிப்பை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று பிரதமருக்கு நீங்கள் ஒன்றும் சொல்லித்தரவேண்டியதில்லை. அவர் என்ன செய்யவேண்டுமோ அதை நன்றாக செய்கிறார்.


vadivelu
ஆக 16, 2025 19:00

அவிங்க எதுக்கு, நாமதான் சண்டை நடக்கும் போதே உக்ரைனில் இருந்து நம்ம மாணவர்களை கூட்டி வந்தோம, நம்ம தமிழக தொழிலதிபர்களுக்கு நாமளே சூப்பர் திட்டம் போட்டுருவோம். அதிக பட்ச வரியை சமாளிக்க அவர்களுக்கு மின்சார கட்டணம், சொத்து வரி குறைப்பு இப்படி எல்லாத்தையும் குறைச்சு உங்க ஒன்றிய அரசின் முகத்தில் அரி பூசுவோம்.


Rajan A
ஆக 16, 2025 18:53

யார் படிக்க போறாங்க. மக்கள் மனு மாதிரி தான்


SRIRAM
ஆக 16, 2025 18:50

இதுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது இதுல அமெரிக்கா வரி விதத்துல கடிதம்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை