உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர்க்கொள்ளளவை இழந்து வரும் வைகை அணை

நீர்க்கொள்ளளவை இழந்து வரும் வைகை அணை

மதுரை : வைகை அணையில் 20 அடிக்கு மேல் மண் மேடிட்டு உள்ளதால் நீர் கொள்ளளவை இழந்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.வைகை அணை மற்றும் நீர் வரும் வாய்க்கால்களை விவசாயிகளுடன் ஆய்வு செய்த பாண்டியன் கூறியதாவது: ஆறு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வைகை அணை சுவற்றின் வெளிப்புற பகுதி, பூங்காக்கள் புதர் மண்டி பராமரிப்பின்றி கிடக்கிறது. உயர் மட்ட குழுவை அனுப்பி அணையை ஆய்வு செய்ய வேண்டும். அணையில் 20 அடிக்கு மேல் மண் மேடிட்டு உள்ளதால் நீர் கொள்ளளவை இழந்துள்ளது. வைகை அணைக்கு மேலே ஒரு புதிய நீர்த்தேக்கம் கட்ட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். தற்போதைய நிலையில் வைகை அணையில் இருக்கும் தண்ணீரை தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க விவசாயிகள் கருத்தறிந்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றார். மாநில இளைஞரணி தலைவர் அருண், துணைச் செயலாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை