உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வைகை அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு; 55 அடியை தாண்டியது!

வைகை அணை நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு; 55 அடியை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து உள்ளது. தற்போது, அணையின் நீர்மட்டம் 55.25 அடியாக உள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.அணைக்கு வினாடிக்கு 10,347 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 71 அடி; தற்போது 55.25 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும்அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anonymous
டிச 14, 2024 15:29

இந்த அணையை தூர் வாரி சரி செய்தால், தென் மாவட்டங்கள் மிகுந்த பயன் பெறும், ஆனால் அதை செய்ய எந்த அரசுக்கும் மனம் இல்லை, வேதனை.


sivakumar Thappali Krishnamoorthy
டிச 14, 2024 12:36

நல்ல வேலை தி மு க எந்த அணையும் கட்ட வில்லை .


MARI KUMAR
டிச 14, 2024 12:21

வைகை அணையில் தண்ணீர் இருந்தால் தான் வைகை ஆற்றுக்கு தண்ணீர் வரும்


சமீபத்திய செய்தி