உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ராகுல் மீது வைகோவிற்கு திடீர் பாசம்

 ராகுல் மீது வைகோவிற்கு திடீர் பாசம்

- நமது நிருபர் - 'முதல்வர் விஜய் பிரதமர் ஆவார்' என பேசுவதை, த.வெ.க., அமைச்சர்கள் நிறுத்த வேண்டும் என்பதற்காக, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிவித்து, அவர் மீது பாசமழை பொழிந்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=791h9c0a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0லோக்சபா தேர்தல், வரும் 2029ல் நடக்க உள்ளது. தமிழகத்தில் த.வெ.க., கூட்டணி அரசில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ராகுலை பிரதமராக்க, காங்கிரசார் முயற்சித்து வரும் நிலையில், த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர், முதல்வர் விஜயை, 'வருங்கால பிரதமர்' என்று பேச தொடங்கி உள்ளனர். இது, காங்கிரசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, 'ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்' என, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாக அறிவித்தார். தமிழக அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று முன்தினம், கன்னியாகுமரியில் நடந்த காங்., நிகழ்ச்சியில் பேசுகையில், 'ராகுல் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர். அதற்கு த.வெ.க., உடன்படாவிட்டால், காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம்' என்றார். இந்நிலையில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''இண்டி கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்கிறது. ''எனவே, ராகுல் தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். முதல்வர் விஜய்க்கு கற்பனையில் கூட அப்படியான எண்ணம் இருக்காது; இல்லை என்பது தான் என் கருத்து,'' என்றார். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக, காங்., - த.வெ.க., இடையே மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், வைகோ கருத்து கூறியுள்ளார். அவர் திடீரென ராகுல் மீது பாசமழை பொழிந்திருப்பதை, காங்., நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என கூறி, வைகோ வெளிப்படையாக ஆதரித்திருப்பது, லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் என்றும் காங்கிரசார் கருதுகின்றனர்.

'த.வெ.க., தலைமையை சிந்திக்க வைக்கும்'

காங்கிரசின் தமிழக நிர்வாகிகள் கூறியதாவது: ராகுலுடன் வைகோ சமீபகாலமாக அரசியல் ரீதியாக நெருக்கமாகி வருகிறார். வைகோவின் பார்லிமென்ட் பேச்சுக்கள் அடங்கிய நுால் வெளியீட்டு விழாவில் ராகுல் பங்கேற்று, வைகோவை புகழ்ந்து பேசினார். அதேபோல, ராகுலை எதிர்கால பிரதமர் என வைகோவும், அவரது மகன் துரை வைகோவும் குறிப்பிட்டனர். விஜய் பெயரை, பிரதமர் வேட்பாளர் விவாதத்திலிருந்து விலக்கி வைக்கும் வகையில், வைகோவின் கருத்து அமைந்துள்ளது. வைகோவின் ஆதரவை, காங்., கூட்டணிக்கு முக்கிய ஆதரவாக பார்க்கிறோம். வைகோவின் கருத்து, த.வெ.க., தலைமையை சிந்திக்க வைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

chinnamanibalan
செப் 01, 2026 18:06

எப்படி இருந்த வைகோ இப்படி ஆகி விட்டாரே


Anand
செப் 01, 2026 13:39

உலகத்துலேயே மானங்கெட்ட பொழப்பு நடத்துவதில் யார் முதலிடம் என போட்டி வைத்தால் முதலிடம் கிடைக்கும்.


7.30
செப் 01, 2026 12:41

தலைவரே நீங்க யாரு கூட வேணாலும் போங்க... ஆனா தளபதி விஜய மட்டும் விட்ருங்க


பிரபா
செப் 01, 2026 11:46

பிரபாகரனை கொன்றவர்களோடு கூட்டு சேர மாட்டேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா???.. தனி ஈழம் அமைத்தே தீர்வேன் என்று கடலில் சத்தியம் பண்ணதெல்லாம் பொய்யா????


Rajarajan
செப் 01, 2026 09:32

வாங்கும் காசுக்கு மேலே கூவுவதில் நம்ம வைகோவை அடிச்சிக்க ஆள் இல்லை.


ஆகுயர்தான்
செப் 01, 2026 07:44

வைகோ விற்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி பார்சல்...அப்போ இலங்கை தமிழர்கள் கதி? அவ்ளோ தான்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை