உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறை எம்.எல்.ஏ., காலமானார்!

வால்பாறை எம்.எல்.ஏ., காலமானார்!

கோவை: வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, 60, இன்று காலமானார்.கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி, 60. வால்பாறை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆகவும்,எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yflrnjcz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புற்று நோய் காரணமாக, அமுல் கந்தசாமி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது. அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை கேட்டறிந்தனர்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அமுல் கந்தசாமி உயிரிழந்தார்.மறைந்த அமுல் கந்தசாமிக்கு, கலைச்செல்வி என்ற மனைவியும், சுப நிதி என்ற மகளும் உள்ளனர். மகள் கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.சிறு வயது முதலே அதிமுகவில் பணியாற்றிய அமுல் கந்தசாமி, ஒரு முறை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும், ஒருமுறை மாவட்ட கவுன்சிலர் ஆகவும் பணியாற்றி உள்ளார். கடந்த 2021ல் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இ.பி.எஸ். இரங்கல்;கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அமுல் கந்தசாமி, நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர்.அமுல் கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.தகனம்மறைந்த வால்பாறை எம்.எல்.ஏ.,வின் உடல், இன்று அன்னுார் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
ஜூன் 21, 2025 23:48

இடைத்தேர்தல் வரக்கூடிய சாத்திய கூறுகள் மிகக்குறைவு. ஆறுமாதம் வரை தொகுதி காலியாகயிருக்கலாம். பின் நாலுமாதம் தான். தேர்தல் ஆணையம் கூடி Special முடிவெடுக்கும்.


Subramanian
ஜூன் 21, 2025 19:56

ஆழந்த இரங்கல். ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி...


Yaro Oruvan
ஜூன் 21, 2025 18:55

சார் மாத்தி யோசிங்க.. அப்படியாவது இந்த திருட்டு திராவிட கும்பல் கொள்ளை அடித்த பணம் கொஞ்சம் மக்களுக்கு வருமல்லவா.. இடைத்தேர்தல் நடத்துங்க


ஆரூர் ரங்
ஜூன் 21, 2025 16:51

இடைத்தேர்தல் நடத்துவது வீண். ஓராண்டு கூட பாக்கியில்லை. செலவழிக்கும் காசில் பாதியைக்கூட திரும்பி எடுக்க முடியாது.. கட்சி ஓனருக்கு கப்பம் கட்டியே அழியும்.


Nandhakumar R
ஜூன் 21, 2025 16:31

RIp


Kovandakurichy Govindaraj
ஜூன் 21, 2025 16:27

வால்பாறை தொகுதி இடைத்தேர்தலில் வென்று காட்டினால் தான் எடப்பாடி பழனி அதிமுக என்ற கட்சியின் பொதுசெயலாளர் பதவிக்கு லாயக்கு . இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு போவது நல்லது


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 21, 2025 16:59

அங்கு இடைத்தேர்தல் வேண்டாம். எதற்காக திமுகவை 1000 கோடி செலவழிக்க சொல்கிறீர்கள்


Natchimuthu Chithiraisamy
ஜூன் 21, 2025 18:15

மக்கள் காசு பெற ஏன் தடை போடவேண்டும் 12லட்சம் கோடியில் எவ்வளவு குறைய போகிறது.


முக்கிய வீடியோ