உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே பாரத் ரயில் பயணியர் ஏமாற்றம்

வந்தே பாரத் ரயில் பயணியர் ஏமாற்றம்

சென்னை:'எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைப்பு, 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே, கடந்த செப்டம்பரில் இருந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதில், முன்பதிவு 130 சதவீதமாக உள்ளது. இதிலுள்ள, 7 'ஏசி' சேர் கார் பெட்டிகள், ஒரு, 'எக்ஸிகியூட்டிவ்' பெட்டி என, மொத்தம் எட்டு பெட்டிகளில், 596 இருக்கைகள் உள்ளன. இவை எப்போதும் நிரம்பி விடுகின்றன.பயணியர் தேவை அடிப்படையில், இந்த ரயிலின் இரு மார்க்கத்திலும், ஜன., 11 முதல், பெட்டிகள் எண்ணிக்கை, 16 ஆக உயர்த்தப்பட்டு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூடுதல் பெட்டிகள் இணைப்பு, 15 முதல் நடைமுறைக்கு வரும் என, தெற்கு ரயில்வே நேற்று அறிவித்தது.பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல, எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், ஏற்கனவே, டிக்கெட் முன்பதிவு செய்து, காத்திருப்பு பட்டியலில், 100 பேர் வரை உள்ளனர். கூடுதல் பெட்டிகள் இணைக்கும் போது, தங்களுக்கு டிக்கெட் உறுதியாகும் என, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்நிலையில், கூடுதல் பெட்டி இணைப்பு தேதி மாற்றப்பட்டது, அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை