உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தே மெட்ரோ ரயில் இந்த மாதம் இறுதியில் ஓடும்

வந்தே மெட்ரோ ரயில் இந்த மாதம் இறுதியில் ஓடும்

சென்னை, :'வந்தே மெட்ரோ' ரயில் தயாரிப்பு பணிகள், இந்த மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.சென்னை, பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலையில், மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், முதல், 'வந்தே மெட்ரோ' ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:குறுகிய துாரத்திற்கு இயக்கும் வகையில், 'வந்தே மெட்ரோ' ரயில் தயாரித்து வருகிறோம். தற்போது, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்த மாதம் இறுதியில் பணிகள் முடித்து, ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்க உள்ளோம்.தற்போது குறுகிய துாரத்தில் இயக்கப்படும், 'மெமு' வகை ரயில்களை நீக்கி விட்டு, படிப்படியாக வந்தே மெட்ரோ ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.'ஏசி' வசதி, பயணியரை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும். கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். தேவைக்கு ஏற்றார் போல, எட்டு முதல் 12 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 100 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் வரை நிற்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ