உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!

வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நாங்கள், 234 தொகுதிகளுக்கு இணையானவர்கள், தகுதியானவர்கள். எங்களை வெறும் டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் கணக்கு போடாதீர்கள்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தேசிய பார்வை

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: வெறும் ஜாதி அரசியலையும், மத அரசியலையும், ஜாதி பெருமிதங்களையும், மத பெருமிதங்களையும் அரசியலாக இங்கு மக்கள் மத்தியில் அள்ளி இறைத்து கொண்டு இருப்பவர்கள் மத்தியில், இடதுசாரி பார்வை கொண்ட கருத்தியல், இந்த மண்ணுக்கு தேவை. தேசிய அளவில் அது வலிமை பெற வேண்டும். அதற்கு தேசிய பார்வையும் தேவை என்கிற அடிப்படையில் இயங்கும் இயக்கம் தான் விடுதலை சிறுத்தை கட்சி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0mh80ged&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பேரணி நடத்துகிறோம்

அதனால் தான் எல்லோரும் தேர்தல் கணக்கு போடுகிற போது, நாம் தேசத்தின் பாதுகாப்பை பற்றி, கவலைப்பட்டு கொண்டு இருக்கிறோம். பேரணி நடத்தி கொண்டு இருக்கிறோம். எத்தனை இடங்களில் நீங்கள் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பாவம் அவர்களுக்கு இன்னும் சிறுத்தைகளை மதிப்பிட தெரியவில்லை. திருமாவளவனை மதிப்பிட செய்ய முடியவில்லை என்பது தான் என்னுடைய பார்வை.

அவர்களுக்கு புரியாது!

அவர்கள் சராசரி இயக்கவாதிகளை போல் நம்மை பார்க்கிறார்கள். அதனால் தான் இந்த கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் எண்ணி கொள்கிறேன். தற்காலிகமான பயன்களுக்காக, இயக்கம் நடத்துபவர்களோடு நம்மை ஒப்பிட்டு செய்து பார்க்கிறார்கள் என்று அவர்களின் கேள்விகளை நான் பரிதாபத்தோடு தான் பார்க்கிறேன். தோழர்கள், அவற்றை எல்லாம் நாம் கடந்தவர்கள், அது அவர்களுக்கு புரியாது. இதை புரிந்து கொள்வதற்கே, அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நம்மை படிக்க வேண்டும்.

டீ, பன்

ஏதோ திருநீற்றை அழித்துவிட்டான் திருமாவளவன் என்று அரசியல் பேசுகிறார்கள். எப்படியாவது எங்களை பற்றி பேசி கொண்டே இருங்கள். எதிராகவோ, ஆதரவாகவோ எங்களை பற்றி பேசிக் கொண்டே இருங்கள். ஏனென்றால் நாங்கள் தேசத்தை திருப்பி அமைப்பதற்காக, புதுப்பித்து கட்டமைப்பதற்காக, புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக, அம்பேத்கரின் கனவை நனவாக்குவதற்காக போராடி கொண்டு இருப்பவர்கள். எங்களை வெறும் டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் கணக்கு போடாதீர்கள்.

234 தொகுதிகள்

நாங்கள் 6 சீட் கொடுத்தோம். 8 சீட் கொடுத்தோம். அதற்கு மேல், அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. நாங்கள் 10 சீட்டுக்கு மேல் இவர்களுக்கு எப்போதுமே தரமாட்டோம். அது உங்கள் மதிப்பீடு. எங்களை பொறுத்தவரை நாங்கள், 234 தொகுதிகளுக்கு இணையானவர்கள், தகுதியானவர்கள். அந்த வலிமை எங்களுக்கு உண்டு. இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. வெறும் தேர்தல் கணக்கில் சொல்லவில்லை. சமூக மாற்றத்தின் பார்வை அடிப்படையில் சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 98 )

Narayanan
ஜூலை 18, 2025 10:48

பச்சை தண்ணீர்கூட பெறாமல் ஏமாறித்தானே திமுக கூட்டணியில் தொடர்கிறீர்கள் . ஏனைய கட்சிகளும் தொடர்கின்றன .


VSMani
ஜூலை 16, 2025 10:21

வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது என்றால் , தனித்து போட்டியிட வேண்டியதுதானே ? எதற்கு கூட்டணி?


Ganesun Iyer
ஜூலை 05, 2025 14:44

இந்த விடீயோவை பார்த்தால் சிறுதைகளுக்கே சிரிப்பு வரும்..


Anand
ஜூலை 05, 2025 03:55

தலைவரே கிடைக்கிறது ஒரு சீட்டு ரெண்டு சீட்டு ஆனாலும் வாங்கிக்கிட்டு டtea யும்


veeramani
ஜூலை 02, 2025 10:04

எம்பா ... . உங்களால் பொது தொகுதிகளில் கால் வைக்க மு டியவில்லை . தென் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது ..பின் ஏன் வீறாப்பு பேச்சு. கிடைத்ததில் மகிழ்ச்சி அடைபவன் புத்திசாலி


Ramesh Sargam
ஜூலை 01, 2025 13:01

முதல்வர் முன் உட்கார அன்று துருப்பிடித்த இரும்பை சேரை போட்டு ஏமாற்றினார்கள். அதை மறந்துவிட்டு, டீ, பன் கொடுத்து எங்களை ஏமாற்ற முடியாது என்று வீர வசனம் பேசுகிறார் இவர்.


saravan
ஜூன் 30, 2025 19:21

அந்த நாலு தொகுதியை எங்கு வேண்டுமானாலும் நிற்கத்தயார் என்கிறார் ...நீங்க தப்பா புரிஞ்சிக்காதீங்க இது அரக்கில்லாத மிடுக்கு லொடுக்கு


Ramalingam Shanmugam
ஜூன் 27, 2025 13:24

சரக்கும் மிடுக்கும் எங்கே போச்சு பிளாஸ்டிக் CHAIR


Ramalingam Shanmugam
ஜூன் 27, 2025 11:38

அவ்ளோ தைரியம் வந்துடுச்சா வந்துச்சா வந்துச்சா


Ramalingam Shanmugam
ஜூன் 26, 2025 15:39

குருமா பிரியாணி கேட்குதோ கெட்ட கேட்டுக்கு குடுக்குற ரெண்டு சீட்டை வாங்கி கொண்டு ஓடி போய்டு வெறுப்பேத்தாத


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை