உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.63 கோடியில் வீராணம் ஏரி மேம்பாடு: கடலுாருக்கு 10 திட்டம் அறிவித்தார் முதல்வர்

ரூ.63 கோடியில் வீராணம் ஏரி மேம்பாடு: கடலுாருக்கு 10 திட்டம் அறிவித்தார் முதல்வர்

கடலுார்: ரூ.63.50 கோடியில் வீராணம் ஏரியை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை கடலுார் அரசு விழாவில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.கடலுார் மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கடலுார் மாவட்ட மக்களின் நலன் கருதி, இன்று 10 புதிய திட்டங்களை அறிவிக்கிறேன்.திட்டக்குடி விருத்தாசலம் வேளாண் மக்கள் பயன் பெறும் வகையில் வெலிங்டன் ஏரிக்கரைகளை பலப்படுத்துவது, வாய்க்கால் புனரமைக்கும் பணி 130 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.கடலுார் மாநகராட்சியில் மஞ்சக்குப்பம் மைதானம் 35 கோடி ரூபாயில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோரிக்கை ஏற்று பண்ருட்டி தொகுதியில் 15 கோடி ரூபாயில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும்.புவனரிகிரி சிதம்பரம் பகுதி மக்களுக்கு பயன் தரும் வகையில் முட்லுாரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை, 4 வழிச்சாலையாக 50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.நெய்வேலி கெடிலம் ஆற்றங்கரையில் 36 கோடி ரூபாயில் வெள்ளத்தடுப்பு சீரமைப்பு பணி செய்யப்படும்.திருவந்திபுரம் கோவில் செல்லும் பக்தர்கள் பயன் பெறும் வகையில் எம்.புதுார் சாலை 7 கோடி ரூபாயில் மேம்பாடு செய்யப்படும்.குறிஞ்சிப்பாடியில் புதிய தாலுகா ஆபீஸ் 6.5 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.தென்பெண்ணை ஆற்றில் 57 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணி மேற்கொள்ளப்படும்.காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி விவசாயிகளின் நலன் கருதி, வீராணம் ஏரியில் 63.50 கோடி ரூபாயில்மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Bhakt
பிப் 21, 2025 23:21

ஒன்லி அறிவிப்புகள் தான்


Ramesh Sargam
பிப் 21, 2025 21:45

வீராணம் என்றாலே, அந்த காலத்தில் இவருடைய அப்பா சம்பந்தப்பட்ட அந்த வீராணம் ஊழல்தான் ஞாபகத்துக்கு வருது. அதுபோன்று இவரும் வீராணம் ஊழல் பகுதி இரண்டு ஏதாவது செய்யப்போகிறாரா? நெஞ்சு திக் திக் என்கிறது.


வீரநாராயணன்
பிப் 21, 2025 20:55

அடடே... இது வீராணம் 2.0 திட்டம். வீராணம் 1.0 ல வாங்குன குழாயில குடும்பமே நடத்துனாங்களே கோவாலு. நம்ம துரை அப்போ ஜூனியர் அமைச்சராச்சே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை