உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் அமைச்சரவையில் வேலுவும், முருகனும் அமைச்சர்கள்

ஸ்டாலின் அமைச்சரவையில் வேலுவும், முருகனும் அமைச்சர்கள்

முருகன் பெயரை வைத்து, தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என அமித் ஷா நினைக்கிறார். வேலையும், முருகனையும் வைத்து வெற்றி பெறுவோம் என, பா.ஜ., தலைவர் நாகேந்திரன் சொல்லுகிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில்தான் வேலுவும், துரைமுருகனும் அமைச்சர்களாக இருக்கின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில், ஐந்து படை வீடுகளில் தி.மு.க., தான் வெற்றி பெற்றது. திருப்பரங்குன்றத்தில், தி.மு.க., போட்டியிடாததால் கைவிட்டு போனது. எவ்வளவு பெரிய மாநாடு போட்டாலும், ஒரே ஒரு கூட்டம் போட்டு மக்களை எங்கள் பக்கம் இழுத்து விடுவோம். தி.மு.க.,வை எவராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அமித் ஷா, ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும், தி.மு.க.,விற்கு ஒரு லட்சம் ஓட்டு கூடும். தி.மு.க.,வை யார் சீண்டினாலும், பழித்தாலும், அவர்களுக்கு கேடு காலம் நெருங்குகிறது என்று அர்த்தம்.- ஆர்.எஸ்.பாரதி, அமைப்பு செயலர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 08:15

பெரியார் கருப்பு சட்டை அணித்ததே ..எதிர்காலத்தில் கழகத்தினர் அய்யயப்பன் கோவிலுக்கு போவார்கள் என்பதற்காக தான் என்று ஒரு போடு போடுங்கள் ஆலந்தூர் பாரதி ,,,,சங்கிகள் இந்த அக்கப்போருக்கு பயந்து அலறி அடித்துக்கொண்டு உயிருக்கு பயந்து ஓடிவிடுவார்கள்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 07:52

அமித்ஷா அவர்களே ..எங்களின் தலைவர் தொடங்கிய விஞான பூர்வமான ஊழலை உங்களால் ஒழிக்கமுடியுமா ? கடைசி கழக தொண்டன் இருக்கும்வரை போராடி தடுப்போம் ...


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 24, 2025 07:36

வாய் சவடால் மட்டும்தான் உங்கள் மூலதனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை