வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எப்படி தொலஞ்சா எண்ண
சென்னை:சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நேற்று ஆஜராகினர். விவாகரத்து பெறுவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இருவரும் தெரிவித்ததை அடுத்து, வரும் 27ல் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.நடிகர் ரஜினி மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவை, 2004ல் நடிகர் தனுஷ் காதலித்து மணந்தார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022ல் அறிவித்தனர். இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நேரில் ஆஜராக, மூன்று முறை உத்தரவிட்டும், தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாததால், சேர்ந்து வாழப்போவதாக தகவல் பரவியது.இந்நிலையில், நேற்று வழக்கு நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினார். பின், 'இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. 'இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா' என்று, நீதிபதி கேட்டார்.அதற்கு இருவருமே, 'எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்' என்று தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 27ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, அறிவித்தார்.
எப்படி தொலஞ்சா எண்ண