உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று(ஆக.,7) உத்தரவு பிறப்பிக்கிறது.வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து இவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்தார். இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உத்தரவை, நீதிபதி தள்ளி வைத்திருந்தார்.இந்நிலையில், இந்த வழக்குகளில், இன்று, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவு பிறப்பிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 10:14

ஜெ சசி வழக்கை வேற மாநில கோர்ட்டுக்கு மாத்தலைன்னா அவங்க நீதியையே விலைக்கு வாங்கிடுவாங்க ன்னு கர்நாடகாவுக்கு மாத்த வெச்சோம்... எங்க மந்திரிங்க, எங்க தலைமைக் குடும்பம் மேல வேற மாநிலத்துல கேஸ் போடக்கூடாது .....


Premanathan Sambandam
ஆக 07, 2024 10:09

தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும்


அப்பாவி
ஆக 07, 2024 09:41

பல்டியடிக்க நிறை சாட்சிகளை தயார் பண்ணிக்குட்டு, சுப்ரீம்.கோர்ட் வரை போய் வெளியே வந்துருவோம்.


RAAJ68
ஆக 07, 2024 09:05

அவர்கள் யாரும் tension ஆக இருபபதாக தெரியவில்லை. தீர்ப்பு என்ன என்று அவர்களுக்கு தெரியும்.


spr
ஆக 07, 2024 08:20

தீர்பெல்லாம் முன்கூட்டியே முடிவு செய்யப்பட ஒன்றே இன்னுமா இந்த நீதிபதி புரிந்து கொண்டிருக்க மாட்டார்? இனி ஜென்மத்திற்கும் அவர்கள் மேல் எவரும் வழக்குத் தொடரக்கூடாது என்று சொன்னால் கூட வியப்பில்லை நீதிமன்றத்தின் நேரம் வீண் சட்டசபையில் அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏன் கழகக் கண்மணிகள் எவர் பேரிலும் எந்தவித வழக்கும் பாதியாக கூடாது என்று காவற்துறைக்கு உத்தரவிடலாம் இவர்கள் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் அல்லவா


Matt P
ஆக 07, 2024 07:40

நமக்கு ஏற்கெனவே தெரிஞ்ச தீர்ப்பா தானா இருக்கும். அதுவும் திமுக அமைச்சர்கள் .பாவம் செந்தில் பாலாஜி தான் கூண்டில மாட்டிக்கிட்டாரு


SIVA
ஆக 07, 2024 07:33

பொன்முடிவுக்கு அளித்த உச்ச மன்ற அதே தீர்ப்பு அவர்களுக்கும்?


SIVA
ஆக 07, 2024 07:29

எல்லாருக்கும் தெரிந்த தீர்ப்பு பொன்முடிக்கு நேர்ந்தது ?


Duruvesan
ஆக 07, 2024 07:12

ஆக பெரிய நீதிபதி விடியலின் பக்கம், எல்லோரும் விடுதலை.பஸ்ல சைக்கில்ல வந்து போகும் அமைச்சர்கள் மீது அவதூறு நல்லது இல்லை ஏன் என நீதி கேள்வி


Raj
ஆக 07, 2024 07:01

ஒன்றும் நடக்க போவது கிடையாது.... மக்களின் மேல் வர்ணம் பூச்சு தான். ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை