உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு

மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு

சென்னை: 'எழுத்தாளர் கோதண்டம் மறைவு, கலை இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம், 87, மறைவுற்ற செய்தி அறிந்து, மிகவும் வருந்தினேன். எளிய குடும்பத்தில் பிறந்து, பஞ்சாலை தொழிலாளராக தமது வாழ்க்கையை துவங்கிய கோதண்டம், அதே எளிய மக்களுக்கான எழுத்தின் வாயிலாக, இலக்கிய உலகில் தடம்பதித்த மிகச்சிறந்த படைப்பாளி. அது மட்டுமின்றி, சிறுவர்களுக்கான இலக்கிய படைப்புகளிலும் பெரும் பங்களிப்பை செய்து, இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். பால சாகித்ய விருது, ஜனாதிபதி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது என, பல்வேறு சிறப்புகளை பெற்றன, இவரது நுால்கள். இவர் எழுதிய நுால்கள், கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு, கலை, இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை