உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனப்பெருக்கத்தை தடுக்க வேண்டுமே தவிர எல்லா நாய்களையும் கொல்ல நினைப்பது தவறு கால்நடை மருத்துவர்கள் கருத்து

இனப்பெருக்கத்தை தடுக்க வேண்டுமே தவிர எல்லா நாய்களையும் கொல்ல நினைப்பது தவறு கால்நடை மருத்துவர்கள் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:“நாய்க்கடியில் இருந்து மனிதர்களை பாதுகாக்க, 'ரேபிஸ்' நோய் குறித்து, பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ' 'நாய்களுக்கு 'ஆன்டி ரேபிஸ்' தடுப்பூசியை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்துவதுடன், இதே காலக்கட்டத்தில், அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையையும் செய்ய வேண்டும்,” என, சென்னை நியூ கார்னர் ஸ்டோன் பல்நோக்கு கால்நடை மருத்துவமனை நிறுவனர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.சொக்கலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: நாய்க்கடி அதிகரிக்கிறது என்பதை காரணம் காட்டி, அனைத்து நாய்களையும் கொல்ல நினைப்பது தவறு. சாலையில் விபத்து நடக்கிறது என்பதற்காக, அனைத்து சாலைகளையும் மூடுவது எப்படி தீர்வாகும்? எல்லா வகை நாய் கடித்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுவது கிடையாது. தெருவில் செல்லும் நாயை கல்லால் அடிப்பது போன்ற துன்புறுத்தும் செயல்களில் ஈடுபடும்போது தான், வெறி உணர்வு ஏற்பட்டு, மனிதர்களை கடிக்க முயற்சிக்கிறது. ஆனால், நாய் கடித்தால் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 'ரேபிஸ்' தொற்று உள்ள நாய் கடித்தால் தான் மனிதர்கள் உயிரிழக்க நேரிடும். வெறி பிடித்தால் மட்டும் தான் நாய் கடிக்கும். நாய்க்கடியில் இருந்து பாதுகாக்க, ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். தன்னார்வ நிறுவனங்கள் வாயிலாக, நாய்களை முறையாக கணக்கெடுத்து, 'ஆன்டி ரேபிஸ்' தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்த தடுப்பூசியை, ஆண்டுக்கு ஒருமுறையாவது தவறாமல் நாய்களுக்கு செலுத்துவது அவசியம். இது தவிர, நாய்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை வேண்டும். இதற்கு, ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித்திரியும் நாய்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கருத்தடை செய்ய வேண்டும். அதாவது, ஒரு பகுதியில் 100 நாய்கள் இருக்கின்றன என்றால், அதில், 60 நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். அப்போது தான், நாய்கள் இனப்பெருக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், ஒவ்வொரு பகுதியிலும், 10 சதவீத நாய்களுக்கு கூட முறையாக கருத்தடை செய்வதில்லை. இதுவே, நாய் இனப்பெருக்கம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார். ரேபிஸ் தடுப்பூசி கட்டண விபரம்: கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவமனைகளில், ரேபிஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. சென்னை, வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், 'ரேபிஸ்' தடுப்பூசிக்கு 120 ரூபாயும், அனுமதி சீட்டுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. தனியார் கால்நடை மருத்துவமனைகளில், 'ரேபிஸ்' தடுப்பூசிக்கு, 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. கருத்தடை அறுவை சிகிச்சை கட்டணம்: அரசு கால்நடை மருத்துவமனைகளில், நாய்களுக்கு, 75 ரூபாய்க்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. வேப்பேரி கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், ஆண் நாய்க்கு கருத்தடை செய்ய, 500 ரூபாயும், பெண் நாய்க்கு, 1,500 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது. தனியார் கால்நடை மருத்துவமனைகளில், கருத்தடை அறுவை சிகிச்சைக்கு, 2,500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kalyan
ஆக 15, 2025 21:41

This doctor should understand that with this type of government setup, is it possible to do sterilization for all street dogs? Yes, street dogs' population is going up steadily. First, food availability in the street should be curtailed.


Ram pollachi
ஆக 15, 2025 12:51

குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், தனக்கு என்று மனிதனை போல் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவுமே கிடையாது.


Srivilliputtur S Ramesh
ஆக 15, 2025 10:42

தெரு நாய்களுக்கு ஆதரவாகப்பேசும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் கவனம் கொள்ள வேண்டும். தெரு நாய்கள் கடித்து, உங்கள் வீட்டில் உங்கள் மனைவியோ, அல்லது உங்கள் மகனோ, மகளோ இறந்து போனால், நீங்கள் இப்படி விலங்கு உரிமைகளைப்பற்றி பேசுவீர்களா ? "பீட்டா" போன்ற அமைப்புகள் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்கின்றன....


veeramani
ஆக 15, 2025 09:39

தெருநாய்கள் சிறார்களை கடித்து குதறுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்துகிறது. காரில் செல்பவர்களையும் துரத்தி விபத்து ஏற்படுத்துகிறது. மஹாத்மவின் போதனை.. உன்னை கொல்லவரும் பசுவையும் எதிர்த்து கொள்ளலாம் ..மகாத்மாவின் போதனைப்படி அனைத்து தெருநாய்களையும் இரக்கம் இல்லாமல் அடித்து கொள்ளவேண்டும். PETA மனிதர்களையும் துவைக்கவேண்டும்


Ramesh
ஆக 15, 2025 08:54

நாய்கள் சாகக் கூடாது. ஆனால் நாய்க்கடி பட்டு குழந்தைகள் மற்றும் முதியோர் சாகலாம்.ஹை இது நல்லா இருக்கே. தெருவில் எல்லோரும் நாய் வளருங்கள் அப்போது தான் நாட்டில் ஜனத்தொகை குறையும்.


சிட்டுக்குருவி
ஆக 15, 2025 06:48

இனப்பெருக்கத்தை தடுப்பதுகூட தவறு. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். நாய்களை ஒழிக்கநினைப்பதுகூட குற்றம். நாய்களின் அருமை அதனுடன் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். சரியான புரிதல் இல்லாமல் கருத்துகள் கூறப்படுகின்றன. நாய்களைப்போல உற்ற நண்பன் உலகில் கிடையாது. மேலை நாடுகளில் பல ஆயிரம் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள். அதற்கென்று தனி பள்ளிகள், நம் பிள்ளைகள் பஸ்ஸில் சென்று படித்துவருவதுபோல் அவைகளும் பஸ்ஸில் பள்ளிக்கு செல்கின்றன. அவைகளை தேவையான பயிற்சி கொடுத்து குழந்தைகளுக்கு நண்பனாக, பாதுகாவலனாக, கண் பார்வையற்றவர்களுக்கு உற்ற தோழனாக, வீட்டுப்பாதுகாவலனாக, மிலிட்டரியில் உதவியாளனாக, காவல்துறையில் மோப்பநாயனாக, ஏர்போர்ட்டுகளில் கடத்தலை மோப்பம் பிடித்து காட்டுபவனாக எல்லாம் பயிற்சி அளித்து உபயோக படுத்துகிறார்கள் .இதற்கென பிரத்தியோக பயிற்சிக்கூடங்கள் உண்டு. முக்கியமாக நோயுற்றவர்களுக்கு தெரபிஸ்ட்டாக பயிற்சியளித்து உதவி பெறுகிறார்கள் .இதை இனப்பெருக்கம் செய்து பயிற்சி அளித்து விற்பனை செயகின்றார்கள் .அதனால் அவைகளை அழிப்பது என்பதை மாற்றி பெருக்கத்தை கட்டுப்படுத்தி ,பயிற்சிக்கூடங்கள் ,பயிற்சியாளர்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும் .ஆடுமாடுகளைப்போல வியாபாரத்திற்கு உகந்தது . அவைகளால் பேசமுடியாதே தவிர மற்றவைகள் எல்லாம் புரியும் .பேசவும் பயிற்சி அளிக்கின்றார்கள் .அதனால் ஒவ்வொரு நகராட்சி,மாநகராட்சிகளிலும் அவைகளுக்கு ப்பாதுகாப்பு இல்லங்கள் அமைத்து ,ப்பாதுகாத்து ,தத்தெடுப்பதைஊக்குவித்து பதுக்கப்பது பயனளிக்கும் .


pmsamy
ஆக 15, 2025 06:44

இயற்கைக்கு எதிராக என்ன செய்தாலும் மனிதனுக்கு பேரழிவு வரும்


Ram
ஆக 15, 2025 06:42

யாரு இந்த போலி மருத்துவர் , உங்க வீட்டுல வச்சு பராமரி


K Jayaraman
ஆக 15, 2025 04:29

நாய்களின் ஆயுள்காலம் 13 வருடங்கள். எனவே அனைத்து ஆண் நாய்களையும் , அரசு, வடக்கே உள்ள ஒரு ஊரில் உணவு கொடுத்து பராமரிக்க வேண்டும். அதே போல் அனைத்து பெண் நாய்களையும் தெற்கே உள்ள ஒரு ஊரில் உணவு கொடுத்து பராமரிக்க வேண்டும். கருத்தரிக்க அந்த நாய்களை அனுமதிக்கக் கூடாது. 13 ஆண்டுகளில் அவை யாவும் தானாகவே இறந்து விடும். அதன்பிறகு தெருக்களில் நாய் தொல்லையே இருக்காது .


முக்கிய வீடியோ