உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெரம்பலூரில் பேச முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார் விஜய்!

பெரம்பலூரில் பேச முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார் விஜய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என நடிகரும், தவெக தலைவரும் விஜய் தெரிவித்தார்.அவரது அறிக்கை: “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” எனும் நமது மக்கள் சந்திப்புப் பயணம், தித்திப்புடன் திருச்சியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து நம் மக்கள் சந்திப்பானது அரியலூர், குன்னம் வரை நீண்டது. அனைத்து இடங்களிலும் மக்களின் தன்னெழுச்சியான பேரன்பும் பேராதரவும் மனம் நெகிழச் செய்தது. உங்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5p2batws&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இத்துணை உணர்வு மிக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன். வழிநெடுக மிக நீண்ட தூரம் கூடியிருந்த மக்கள் திரளைக் கடந்து செல்லவே இயலாத நிலையால், நேற்று நள்ளிரவு கடந்தும் பெரம்பலூரில் நம்மைச் சந்திக்கக் கூடி இருந்த பல்லாயிரக்கணக்கான நம் உறவுகளைக் காண இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. எனவே அனைவரது நலன் கருதி, மிகுந்த மன வருத்தத்துடன், மீண்டும் இன்னொரு நாள் பெரம்பலூர் வருவதென முடிவெடுக்க வேண்டிய நிலை உண்டானது. பேரன்பு கொண்டு காத்திருந்த பெரம்பலூர் மக்களிடம் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Tamilan
செப் 14, 2025 21:27

சினிமாவுல நடிக்க போகலாம்


ஆரூர் ரங்
செப் 14, 2025 16:23

பெரம்பலூர் காரங்க அதிர்ஷ்டக்காரங்க. தப்பிச்சாங்க .


திகழ்ஓவியன்
செப் 14, 2025 14:25

இப்படி தான் பிஜேபி யினர் கோவை யில் நோயாளிக்கு WHEEL CHAIR கொடுக்கவில்லை என்று வீடியோ VIRAL அனால் அரசு மருத்துவமனை வெளி இட்ட வீடியோவில் அந்த நபர் வேண்டும் என்றே இப்படி செய்து இருக்கிறார்


திகழ்ஓவியன்
செப் 14, 2025 13:57

வந்தேன்டா பால் காரன் வந்தாலும் கூட்டம் கூடும் அப்படி இருந்தும் 1300000 வோட்டில் தோற்றாரே ஆகவே கூட்டம் வேறு வோட்டு வேறு


திகழ்ஓவியன்
செப் 14, 2025 13:49

இந்த கூட்டத்தை வைத்து என் எனில் 10 15 வயது சிறார் எல்லாம் வந்திருக்குகள் விஜய் ஐ பார்க்க ஆக இவர்களுக்கு வோட்டு கிடையாதே, என் எனில் கர்நாடக ராஜ்குமார் இப்படி தான் சிவாஜி இப்படி தான் , சிரஞ்சீவி இப்படி தான் , கூட்டம் அனால் வோட்டு வர வில்லை ஆகவே இவர் ஒரு UNTESTED பிளேயர் , கிரௌண்ட் குல வந்தால் தான் இவர் பேட்ஸ்மேன் , பௌலர் , இல்லை அடலீஸ்ட் பந்து வெளியே போனால் பொறுக்கி போடும் பால் பாய்ஸ் லெவல் என்று தெரியும் , கடைசியில் கானல் நீர் ஆக வாய்ப்பு தான் அதிகம்


Rajkumar Ramamoorthy
செப் 14, 2025 17:48

ராஜ்குமார் அரசியலில் போட்டியிட்டதே இல்லை. தெரியாமல் சொல்ல வேண்டாம்.


Moorthy
செப் 14, 2025 13:18

திமுகவின் மதுவிலக்கு வாக்குறுதி நிறைவேற்றாதது குறித்து விஜய் ஏன் பேசவில்லை ??


திகழ்ஓவியன்
செப் 14, 2025 13:45

அவரே DMK கொள்கை தான் அவர் கொள்கை என்கிறார் , என் மோடி அவர்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் , ஒரே மதுவிலலைக்கு இந்தியா முழுமைக்கும் என்று கொண்டுவரச்சொல்லுங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 13:06

அப்போ நீயி எங்க இருந்தே


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 13:31

கூவாட்டூரு .....


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 13:04

எதையும் சரியா செய்ய மாட்டியாமே


Artist
செப் 14, 2025 13:23

வெளிச்சம் பத்தாம போயிருக்கும் ..


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 14, 2025 13:31

கருணா ஸ் மேல கோவமே வரலியா >>>>


Moorthy
செப் 14, 2025 12:47

சரி, அடுத்த தடவ பகல்லயே வாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை