உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டீ கடை பெஞ்ச்: விஜய் ரசிகர்கள் - ஆளுங்கட்சியினர் சைபர் வார்!

டீ கடை பெஞ்ச்: விஜய் ரசிகர்கள் - ஆளுங்கட்சியினர் சைபர் வார்!

''எம்.எல்.ஏ., நியமித்த காவலாளிக்கு, அதிகாரிகள் சம்பளம் குடுத்துட்டு இருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஜமுனாமரத்துார் பகுதிகளில், புதுசா சுற்றுலா மாளிகை கட்டியிருக்காங்க... இதுக்கு, காவலாளிகள்னு யாரையும் அரசு நியமிக்கலைங்க...''செய்யாறு சுற்றுலா மாளிகையில், 24 மணி நேர காவல் பணிக்கு ரெண்டு பேரை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஜோதி பரிந்துரை பண்ணியிருக்காருங்க... அவங்களுக்கு, அந்த பகுதி பொதுப்பணித் துறை உயர் அதிகாரி, தன் சொந்த பணத்தில் இருந்து மாசம் தலா, 10,000 ரூபாயை சம்பளமா தர்றாருங்க...''அதே நேரம், அந்த காவலாளிகளும் சரியா வேலைக்கு வர்றது இல்லை... எம்.எல்.ஏ., பெயரை சொல்லி, அடிக்கடி வெளியில போயிடுறாங்க... அதிகாரிகள் எதுவும் பேச முடியாம தவிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.''கோஷ்டிப்பூசல் உச்சத்துல இருக்கு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...''பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலரா இருக்கிற கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய சேர்மனாகவும் இருக்காரு... புஜங்கராயநல்லுார் கிராமத்துல புதுசா கட்டிய பஞ்சாயத்து ஆபீஸ் கட்டடத்தை சமீபத்துல இவர் திறந்தாரு வே...''அப்ப, கிருஷ்ணமூர்த்திக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரான காட்டுராஜா மற்றும் ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி, காரை மறிச்சு போராட்டத்துல ஈடுபட்டாவ வே...''அப்புறமா காட்டுராஜா, கட்சியின், 'சின்னவரை' பார்த்து, '42 வருஷமா ஒன்றிய செயலரா இருந்தும், கட்சி வளர்ச்சிக்கு கிருஷ்ணமூர்த்தி உருப்படியா எதுவும் பண்ணலை... அவரை மாத்துங்க'ன்னு புகார் சொல்லிட்டு வந்தாரு வே...''இதுக்கு விளக்கம் தர போன கிருஷ்ணமூர்த்தியை, சின்னவர் சந்திக்க மறுத்துட்டாரு... இருந்தாலும், 'காட்டுராஜாவை கட்சியை விட்டு நீக்குங்க'ன்னு, மாவட்ட செயலர் சிபாரிசு கடிதத்தோட தி.மு.க., தலைமைக்கு கிருஷ்ணமூர்த்தி அழுத்தம் குடுக்காரு... 'ரெண்டு பேர்ல ஒருத்தர் தலை உருளும்'னு கட்சியினர் பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.''சமூக வலைதளங்கள்ல சண்டை போடுறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''நடிகர் விஜய், புது கட்சி துவங்கிட்டாருல்ல... அவருடைய ரசிகர்கள் எல்லாம், தங்களுடைய, 'எக்ஸ்' பக்கத்துல, விஜய்க்கு ஆதரவாகவும், அரசியல்ல அவர் வெற்றி பெறுவது மாதிரியான, 'மீம்ஸ்'களையும், படங்களையும் போட்டுட்டு இருக்காங்க பா...''ஆளுங்கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள், விஜய் படத்தையும், சில நடிகையரின் மார்பிங் படத்தையும் இணைத்து, அவதுாறு கருத்துகளை பதிவிடுறாங்க... அதுக்கு பதிலடியா, அமைச்சர் உதயநிதி குடும்பத்தினரை,விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்கள்ல விமர்சிக்குறாங்க பா...''இதுல, விஜய் ரசிகர் மணிவண்ணன் என்பவர் மீது, சைபர் கிரைம் போலீசார் அவதுாறு வழக்கு பதிவு செய்திருக்காங்க... அதே மாதிரி, 'விஜய் குடும்பத்தினர் மற்றும் சில நடிகையர் படங்களை மார்பிங் பண்ணி பதிவிட்ட, ஆளுங்கட்சியினர் மேலயும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்கணும்'னு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வச்சிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பேச்சு முடிய,பெரியவர்கள் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்