உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்

99 ஆண்டு குத்தகைக்கு கச்சத்தீவை பெற வேண்டும்: விஜய் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடி, கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். '' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:* ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2wzgx8o4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. * மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழக அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. * 1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். * 1999ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மத்திய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. * அன்று முதல் இன்றுவரை மத்திய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. * அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. *இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. * குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் மத்திய அரசு, எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? * கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. * எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ., அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது. * கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. * நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடி, கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். * இலங்கை செல்லும் நம் பிரதமர், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

மோகன்
ஏப் 07, 2025 02:32

சினிமா வசனங்கள்... வேறு என்ன தெரியும் விஜய்க்கு ...


K.Ramakrishnan
ஏப் 05, 2025 18:39

எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. அறிவுக்களஞ்சியமா இருக்கிறீங்களே...


Venkatesan Ramasamay
ஏப் 05, 2025 17:52

ஏங்க .... அது நம்ம நாட்டோட இடம் ... நாம ஏன் குத்தகைக்கு எடுக்கணும்.. ஏதாவது அறிக்கை விடணுமுன்னு சும்மா அவித்துக்குவேடாதீங்க


Mr Krish Tamilnadu
ஏப் 05, 2025 15:07

ஆட்சியை விட, நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லுவது, ஆழ்ந்த மக்கள் சார்ந்த அறிவு வேண்டும். நமது இடத்தையே நாம் ஏன் குத்தகைக்கு பெற வேண்டும். தவறாக வழிகாட்டுதல்களில் தீர்வாக பேசுவது நமதாக இருக்க வேண்டும்.தற்காலி தீர்வு எனில், கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக மறு பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதுவரை கட்சத்தீவு பகுதிக்கு வரும் இந்திய மீனவர்களை கைது மற்றும் துன்புறுத்துவதை நிறுத்தி வையுங்கள், உங்கள் நியாயப்படி. என்பதே சரியாக இருக்கும்.


Sivagiri
ஏப் 05, 2025 13:46

தம்பீ , , , இப்ப விட்ருங்க . . . ஏன்னா பிரதமரோட பயண திட்டம் எல்லாம் ஏற்கனவே முடிவு பண்ணி பல மாசம் ஆச்சு . . . அவரு திரும்பி வர்ற நேரத்தில , இப்ப போயி , மீடியாவில் , புதுசு புதுசா அட்வைஸ் ரிலீஸ் பண்ணிக்கிட்டிருக்காதீங்க . . ஒரு பிரயோஜனமும் இல்ல . ஒங்க எதிரி ஸ்டாலின் அய்யாகிட்டயும் சொல்லீருங்க . . . அடுத்த தடவை மோடி சிலோனுக்கு போகும் போது , டக்குனு டில்லிக்கு கிளம்பி போயி ஒங்க ஆலோசனைகளை எல்லாம் அவுத்து விடுங்க , , , எதோ கொஞ்சமாவது ப்ரயோஜனமா இல்லாவிட்டாலும் , லாஜிக்காவாவது இருக்கும்.


Rengaraj
ஏப் 05, 2025 12:30

விஜய் அவர்களே பிரதமருக்கு வேண்டுகோள் வைப்பது இருக்கட்டும். முதலில் கேரவன் பாலிடிக்ஸ் பண்ணாதீங்க வெளியில் வாங்க கச்ச தீவு சம்பந்தமா இரு நாடுகளுக்கு இடையே உள்ள நடைமுறை சட்டம் நல்லா தெரிஞ்ச அறிஞர்களிடம் பேசுங்க குறிப்பா முஸ்லீம் மக்கள்கிட்ட கருத்து கேளுங்க முஸ்லீம் பெண்கள்கிட்டயும் கேளுங்க யாரவது ஏதாவது எழுதிக்கொடுத்தா அதுல எழுதியிருக்கிறதை ஆராய்ஞ்சு பேசுங்க துண்டுச்சீட்டு ஏதாவது கிடைச்சா உடனே அதுல எழுதியிருக்கிறதை அப்படியே பேசிறாதீங்க புவிசார் அரசியல் தெரியுமா உங்களுக்கு ? அதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு எதையும் பேசுங்க முதலில் உங்க கட்சிக்கு எல்லா தொகுதிக்கும் பூத் ஏஜென்ட் போட்டாச்சா முதலில் அதை பண்ணுங்க


R SRINIVASAN
ஏப் 05, 2025 06:49

விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கச்சத்தீவு,waqf விவகாரம் இவைகளை மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் .தமிழ் நாட்டில் ,குறிப்பாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள்,vayathanavargal பயப்படுகிறார்கள் .தங்களுடைய கட்சியினரை தமிழகம் முழுவதும் சுத்ரு பயணம் செய்யச்சொல்லி அவைகளை படம் பிடித்து அரசுக்கு தெரியப்படுத்தினால் வாக்காளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


Bhaskaran
ஏப் 05, 2025 04:02

முதலில் இவ்வளவு விஷயம் தெரிந்த இந்த நபரை வெளிவிவகாரத்துறை அமைச்சராக போடணும்


நரேந்திர பாரதி
ஏப் 05, 2025 04:01

ஒரு படத்துக்கு இருநூறு கோடி வாங்கும் ஜோசப் விஜயே கட்சத்தீவை குத்தகைக்கு எடுத்து மீன் பிடிக்கலாமே


C S K
ஏப் 05, 2025 03:54

நீங்கள் சொன்னால் தான் பிரதமருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா என்ன?? ஏன் இத்தனை வருடங்களாக உங்கள் நண்பர் ராகுலிடம் இந்த விவகாரத்தை பற்றி பேசவில்லை? வெறும் திமுக மட்டும் தவறு இழைத்து விட டது என்று பேச கூடாது. காங்கிரஸ்என்ன செய்தது என்று பேச ஏன் உங்களுக்கு வாய் தயங்குகிறது??? பேச்சு நேர்மையும் இருக்கவில்லை?


புதிய வீடியோ