உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்

தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்

வேலூர்: தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், விஜய்க்கு வெளியே வர பயம் என அமைச்சர் துரைமுருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். நிருபர்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ அழைப்பில் ஆறுதல் கூறி இருக்கிறார்? துரைமுருகன் பதில்: தான் குற்றம் புரியவில்லை என்றால், தைரியமாக விஜய் தன் தோழர்களோடு துயர சம்பவம் ஏற்பட்ட வீடுகளுக்கு போயிருக்க முடியும். தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், அவருக்கு வெளியே வர பயம். எனவே வீடியோ காலில் பேசுகிறார்.நிருபர்: கச்சத்தீவு தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருக்கிறாரே?இதற்கு, 'அவருக்கு ஒன்றும் தெரியாது, யாரோ சொல்லிக் கொடுத்து, இவர் பேசி வருகிறார்' என துரைமுருகன் பதில் அளித்து விட்டு, சிறிது நேரம் சிரித்த பிறகு காரில் புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
அக் 07, 2025 18:00

சட்டசபையில் புடவையை இழுத்தது உன் நெஞ்சு சுடவில்லையா, அதுசரி திருட்டு கும்பலுக்கு, நெஞ்சு, மனசாட்சி எல்லாம் இல்லையே


duruvasar
அக் 07, 2025 17:59

அன்று சேலையை உருவிய துச்சானதன் இன்று வேட்டியை உருவ நினைப்பது இயற்கையானதுதான் அது போக இன்று அப்போலோவில் ஹவுஸ் புல்லா ?


M Ramachandran
அக் 07, 2025 17:53

அப்படி அல்ல. உங்களைய பற்றி நன்றாக அறிந்ததினால் உயிர் பயத்தின் காரணமாக கொஞ்சம் பாது காப்பு கருதி பதுங்க வேண்டிய நிலமை.


sundarsvpr
அக் 07, 2025 17:47

உண்மை பேசும் அரசியல்வாதிதான் வெளியில் வர பயப்படுவான். துரைமுருகனுக்கு இந்த பயம் இல்லை. விஜய் பயப்பட காரணம் விஜய் ஜோசப் என்று கூறிக்கொண்டு வெளியில் வருவதற்கு.


ஆரூர் ரங்
அக் 07, 2025 17:11

வேங்கைவயலுக்கு செல்ல உங்க தலைவருக்கு தயக்கமா இருக்கு. விஜய்க்கு சதிகார அணிலின் குகைக்குள் செல்ல தயக்கம். உங்களை நம்பிய பி டீமுக் கே இந்த கதி. இனிமே உங்களை நம்பி எவரும் டீம் அமைக்க மாட்டாங்க.


KOVAIKARAN
அக் 07, 2025 17:10

இவருக்கு வயதாகிவிட்டதால் தற்போதைய களநிலவரம் தெரியாமல், புரியாமல் உளறுகிறார். கரூர் சம்பவம் திமுகவினரால், குறிப்பாக 10 ரூபாய் செந்தில் பாலாஜியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு துயர சம்பவம். அந்த திட்டத்தில் விஜயைக் கைது செய்வதும் அடங்கும். எனவே, உளவுத்துறையிலுள்ள அவரது நண்பர் மூலம் தகவல் கிடைத்து உடனே சென்னை சென்றிருக்கலாம் என்று ஒரு சிலர் நினைக்கிறார்கள். உளவுத்துறை ADGP திரு டேவிட் ஆசீர்வாதம் அவர்கள்தான் எனவே கரூருக்கு எப்போது வந்தாலும் அவரைக் கைது செய்ய ஏவல் துறை துடித்துக்கொண்டிருக்கிறது. எனவேதான் திமுகாவிலும் அவரது கூட்டணிக் கட்சியில் உள்ளவர்களும் ஆளாளுக்கு அவரை உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.


Sudha
அக் 07, 2025 17:05

அந்த புடவை இழுத்த துச்சாதனன் இவனை, இவனோட டூப்ளிகேட் டா?


Vasan
அக் 07, 2025 17:01

Rajinikanth has gone to Himalayas, to Badrinath, Kedarnath. Thats why, old student has come out of house.


முக்கிய வீடியோ