உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவினருக்கு எஸ்ஐஆர் விண்ணப்ப படிவம் மறுப்பு; விஜய் புது குற்றச்சாட்டு

தவெகவினருக்கு எஸ்ஐஆர் விண்ணப்ப படிவம் மறுப்பு; விஜய் புது குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விண்ணப்ப படிவத்தை தவெகவினருக்கு வேண்டுமென் றே ஆட்சியாளர்கள் தர மறுப்பதாக திமுக மீது தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.அந்த வீடியோவில் அவர் கூறியதாவது; இந்திய அரசியல் சாசனம் நம் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்திருக்கும் உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனுடைய வாக்குரிமை ரொம்ப முக்கியம். வாக்குரிமை வெறும் உரிமை மட்டுமல்ல, நம்ம வாழ்க்கை.தமிழகத்தில் இருக்கும் நம்ம யாருக்குமே ஓட்டுப்போடும் உரிமை இல்லை என்றால், நீங்கள் நம்புவீங்களா? நான் பயமுறுத்தவதாக நினைக்க வேண்டாம். அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தால் நம்மளைப் போல லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமை தான். ஓட்டுப்போடும் உரிமை இல்லாத மாதிரியான நிலைமை வந்தாலும் வரலாம். இதுக்கு முக்கிய காரணம் அந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தான்.

உரிமை இல்லை

கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே இந்த ஓட்டுப்போடும் உரிமை இல்லை. பிஎல்ஓக்கள் கொடுக்கும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தால், அதனை பரிசீலனைக்கு எடுக்கும் தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடும். அந்த வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்தப் பட்டியலில் நம் பெயர் இருந்தால் தான் நாம் ஓட்டுப்போட முடியும். அந்தப் புது பட்டியல் வரும் வரை, நாம் வாக்காளர்களாக என்பதை உறுதி செய்ய முடியாது. ஒருவேளை அந்தப் பட்டியலில் நம் பெயர் இல்லையெனில், புதிய படிவத்தை மீண்டும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

சந்தேகங்கள்

புது வாக்காளர்கள் படிவம் 6 என்பதை பூர்த்தி செய்து பிஎல்ஓக்களிடம் நேரடியாக கொடுக்கலாம். ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால், அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்த வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட இதனை செய்யலாம்.இதை எல்லாம் சரியாக செய்தாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீது சில சந்தேகங்கள் உள்ளன. 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரே மாதத்தில் எப்படி விண்ணப் படிவங்களை கொடுக்க முடியும். அதிகாரிகள் வரும் போது வீட்டில் யாரும் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்? இதில், பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் தான். இவர்களுக்கு யார் சரியான பதிலை சொல்வார்கள்.ஒரு நியாயமான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி நடக்க வேண்டும். இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை குறிப்பிட்டு நீக்க வேண்டும். ஏற்கனவே ஓட்டு இருப்பவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள் என்பது தான் கேள்வி? புதிய வாக்காளர்கள், ஓட்டு இல்லாதவர்களை மட்டும் சேர்த்தால் போதாதா?2021 மற்றும் 2024ல் ஓட்டு போட்டவர்களும் இப்போது மீண்டும் பதிவு செய்வது என்பது தான் குழப்பம். இதன் காரணமாகத் தான் நாங்கள் இந்த திருத்தத்தை எதிர்க்கிறோம்.

ஆட்சியாளர்கள் தான்

புதிது புதிதாக புகார்கள் எழுகின்றன. தவெக தொண்டர்களுக்கு படிவங்கள் கொடுப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதை யார் செய்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கும் சிலர் தான் இதை செய்ய தொடங்கியுள்ளனர். எனவே, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவருக்கும் விண்ணப் படிவம் கிடைத்தாக வேண்டும். அப்படி கிடைக்காவிட்டாலும், ஆன்லைனில் இந்தப் படிவம் கிடைக்கும்.

முதல்முறை வாக்காளர்களே!

முதல்முறை வாக்காளர்களுக்கு இந்தப் படிவத்தை பூர்த்தி செய்ய உதவ வேண்டும். ஏனெனில் வரும் தேர்தலில் இவர்கள் தான் முக்கிய பங்காற்ற உள்ளனர்.எல்லா விஷயத்திலும் பிரச்னை கொடுக்கும் இவர்கள், ஓட்டு போடும் விவகாரத்தில் உத்தமராகவா இருக்கப் போறாங்க. வரும் தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும். நம் பலத்தை காட்ட வேண்டும். அதுக்காக, அந்த பலமான அதிகாரமிக்க ஆயுதமான ஓட்டு, ஜனநாயகத்தை கையில் எடுக்க வேண்டும். அது இருந்தால் தான் அந்த வெற்றியை நோக்கி நாம் பயணிக்க முடியும்.தமிழ்நாடே அந்த வாக்குச்சாவடி முன்பு திரண்டு நிற்க வேண்டும். அதைப் பார்த்துட்டு, தமிழகமே தமிழக வெற்றிக் கழகமா? தமிழக வெற்றிக் கழகம் தான் தமிழகமா? என்பதைப் போல இருக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது சில பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. உங்களின் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் உங்களின் பெயர் சரியாக இருந்தால் தான் பூர்த்தி செய்ய முடியும். எனவே, உஷாராக இருங்கள், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

panneer selvam
நவ 16, 2025 14:07

Now issuance of voter application is going on . Even if you do not get one , just apply on line .


Mr Krish Tamilnadu
நவ 16, 2025 08:17

வரும் அலுவலர்கள், புதிய வாக்காளர்களுக்கு விண்ணப்பம் தரவில்லை. எனது மகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுத்து விட்டோம். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு, முகாம் போடும் போது சேர்த்து கொள்ளுங்கள் என கூறுகிறார்கள்.


MARUTHU PANDIAR
நவ 16, 2025 09:07

எதாவது ஒரு முறையை பின் பற்றி தானே அக வேண்டும்? எல்லாவற்றுக்கும் அவர்களையே குறை கூறலாமா? உதாரணத்துக்கு ஒரு ரேஷன் கார்டுக்கோ ட்ரைவிங் லைசென்சுக்கோ ஒரே ஒரு நடையில் காரியாம் முடிந்து விடுகிறதா? கையில் கிடைக்கும் வரை சும்மா இருப்போமா?


vadivelu
நவ 16, 2025 06:36

ஓகே கிருத்துவர்கள் பெரும்பாலும் விஜய் ஆதரவாளர்கள் என்று வித்து கொண்டாலும், தூவும் உதைக்கும், முக்கால்வாசி தமிழக கிருத்துவர்கள் விஜய் போலத்தானே இந்து பெயரில் இருப்பார்கள். .ஜார்ஜ் வெங்கடராமன், டேவிட் சுந்தரம், ஜோசப் ஜெயராஜ் அப்படித்தானே இருக்கும்.


vaiko
நவ 16, 2025 04:20

உண்மையான உன் உச்சகுடுமி பெயர போடாமல் அமர் அக்பர் அந்தோணி என்ற பொய் பெயரை போட்டதால் உன் படிவம் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சங்கிகளுக்கு ஒரு ஒட்டு குறைந்துவிட்டது நீ செய்த மடத்தனத்தால்


Anbarasu K
நவ 16, 2025 00:48

இவரருக்கு கூட புரிதல் இல்லன்னா தேர்தல் ஆணையம் விளக்கி கூற வேணும் இல்லையா இவருக்கு எப்போ சுய புத்தி வரப்போகுதோ போங்க ஒன்னும் சொல்றதுக்கு இல்ல


Mr Krish Tamilnadu
நவ 15, 2025 23:16

அடிச்சு கேட்பாங்க, சொல்லிராதீங்க என்பது போல் இருக்கு. Form fill பண்ணி கொடுக்குறோம். பட்டியலில் இருப்பது இல்லாதது பிறகு தான் தெரியும். எந்த தகவலை முக்கியமாக பூர்த்தி செய்ய வேண்டும். புது பட்டியலில் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும். ஒப்புகை சீட்டில் என்ன தகவல் இருக்கும்?.


MARUTHU PANDIAR
நவ 15, 2025 22:14

தமிழ்நாட்டில் ஆளும் கூட்டணி அளவுக்கு வாக்காளர் சீர் திருத்தத்தை எதிர்க்கும் ஒரே ஆல் ஜோசப்பு தான். 2024 பட்டியல் அடிப்படையில் யாரெல்லாம் ஓட்டு போட்டர்களோ அப்படியே 2026 இலு ம் போடணுமாம். அதாவது ஆளே இல்லாத வாக்காளர், இறந்து போனவர், ஒரே விலாசத்தில் 40 வாக்காளர்கள் இப்படி போலி வாக்காளர்கள் அப்படியே தொடரணுமாம். தேர்தல் நெருங்க நெருங்க டீம்க கூட்டணியை நோக்கி நெருங்கி நெருங்கி வந்து... நிச்சயம் அதில் ஐக்கியம் ஆகி விடுவான்.


D Natarajan
நவ 15, 2025 22:10

SIR யை எதிர்த்தவர்கள் நிலைமை புரியவில்லையா. காங்கிரஸ் ஒருந்த இடம் தெரியாமல் போனது. அதேநிலை தான் இந்த கட்சிக்கும்


Vasan
நவ 15, 2025 21:48

விஜய்க்கு திமுக அரசியல் எதிரி. விஜய்க்கு பிஜேபி கொள்கை எதிரி. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், விஜக்கு திமுக கொள்கை எதிரி அல்ல, மற்றும் விஜய்க்கு பிஜேபி அரசியல் எதிரி அல்ல.


Maruthu Pandi
நவ 15, 2025 21:46

கரூரில் ஓடி ஒளிந்து முக்காடிட்ட விஜய் இப்போது, எதோ ஒரு சாக்கில் மீண்டும் பேச ஆரம்பிப்பது வேடிக்கை . இப்போது இவரை பார்த்து பொது மக்கள் கேட்கும் கேள்வி " ஏன்டா நீ இன்னும் போகலையா ? "