உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்

1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நமது தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிக பெரிய தேர்தல்கள். 1967, 1977 அதுமாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது'' என தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை பனையூரில் த.வெ.க., உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற விஜய், ''வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு'' என்ற செயலியை வெளியிட்டு, கட்சியினர் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். த.வெ.க.,வில் உறுப்பினராக சேர்ந்ததில் மகிழ்ச்சி என உறுப்பினர் அடையாள அட்டை பெற்றவர்கள் தெரிவித்தனர்.

மிக பெரிய தேர்தல்கள்

தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான மொபைல் ஆப்-ஐ வெளியிட்டு விஜய் பேசியதாவது: எல்லோருக்கும் வணக்கம், இதுக்கு முன்னாடி நமது தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிக பெரிய தேர்தல்கள். 1967, 1977 அது மாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம், முதலில் இருந்தே சொல்லி கொண்டு இருக்கிறோம். அந்த இரண்டு மாபெரும் தேர்தல்களில், ஏற்கனவே வெற்றி பெற்று கொண்டு இருந்தவர்களின் அதிகார பலம், அசுர பலம் எல்லாவற்றையும் எதிர்த்து நின்று தான் புதிதாக வந்தவர்கள் ஜெயித்து இருக்கிறார்கள்.

சிம்பிள் லாஜிக்

எப்படி ஜெயித்தார்கள் என்று பார்க்கும் போது, அது சிம்பிள் லாஜிக் தான். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என்று எல்லா மக்களை சந்தித்து இருக்கிறார்கள். அண்ணாதுரை சொன்னதை நானும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

கற்றுக்கொள்

மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ். மக்களுடன் சேர்ந்து திட்டமிடு, இதனை சரியாக செய்தால் போதும், ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் எல்லா குடும்பத்தினரையும் உறுப்பினராக சேர்த்து, நம்ம கண்டிப்பாக ஜெயிக்க முடியும். அதனால் தான் இந்த ஆப்-ஐ அறிமுகப்படுத்துவதில் ரொம்ப சந்தோஷம் படுகிறேன்.

வெற்றி நிச்சயம்

இதுக்கு அப்புறம் மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என்று தொடர்ந்து மக்களுடன் மக்களாக தான் இருக்க போகிறோம். இதனால், இப்பொழுது இருந்தே அதற்கான வேலையை தொடங்க வேண்டும். நாம் இருக்கிறோம், நமது உடன் மக்கள் இருக்கிறார்கள், இதுக்கு மேல என்ன வேணும். நல்லதே நடக்கும். நல்லதே நடக்கும்,வெற்றி நிச்சயம். நன்றி. இவ்வாறு விஜய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Gokul Krishnan
ஜூலை 30, 2025 22:23

தொட்டப்பட்டா ரோட் மேல முட்டை பரோட்டா நீ தொட்டு கொள்ள சிக்கன் தராட்ட வட்ட வட்ட கல் தோசை சுட்டு போடட்டா நீ தொட்டு கொள்ள மட்டன் தரட்டா நீ ஒரு எல் கே ஜி நான் ஒரு பி ஹை இச் டி இப்படி பாட்டு பாடி தளபதி பிரச்சாரத்தை ஆராம்பிக்க வேண்டும்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 30, 2025 22:18

பெரியாரின் பாடம், அண்ணாவின் தலைமையில் அயராத சமூக உழைப்பு, 20 ஆண்டு முயற்சி 1967 ஆட்சி மாற்றம். எம்ஜியார் திமுகவில் வளர்ந்து, பிரச்சார மேடைகளில் பகுத்தறிவை பரப்பி, பலமுறை எம்எல்ஏ வாக இருந்து, பட்டி தொட்டியெல்லாம் சென்று அரசியலில் பயணித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். கொஞ்சம் மூளை இருந்தாலும் இதை யோசித்து அறியலாம். அது இல்லாததனால் தான் விஜய் வித்தியாசமாக ஊகிக்கிறார்


M Ramachandran
ஜூலை 30, 2025 18:18

சாமுராய் சினிமா தீமுக்கா வை அப்படியென பரிதி பலிக்கும் கதை. எல்லோரும் பாருங்க. விஜய் பார்க்க மாட்டார்.அவரின் எஜமானர்களின் கதை. அவரும் அரசாங்கததை வரி ஏமற்றுபவர் தான்.


M Ramachandran
ஜூலை 30, 2025 17:25

கனவு என்பது அவன் அவன் உரிமை. ஆனால் சில கனவுகளை வெளியில் சொல்லமாட்டார்கள். அவமானம்.சைய்யகில் போட்டியின் கனவும் அத்தகைய்யதெ. தோற்றாலும் கவலையில்லை. பினாமி பணம் தானெ. கணிசமான பணம் கைய்யிற்க்கு யேற்கனவே வந்து விட்டது. கையை காலை தூக்கி ஆடி சம்பாதிப்பதை விட சுமார் 20 மடங்க்கு தாய் கழகம் மூலம் வந்துடுச்சி. கூட போறவன் பாவம் யேமந்த சோணகிரியன்ங்கள் அவன் களுக்கு மட்டும் சங்கு தான். சொறிஞ்சி விட்டு கிட்டு இருக்குற வேலைக்கு கூட கூலி கிடையாது.


Rengaraj
ஜூலை 30, 2025 16:40

1967 ல் காங்கிரெஸ்ஸை வீழ்த்தி அண்ணா தலைமையில் திமுக வென்றது. வாய்ப்பேச்சு ஜாலராக அண்ணாதுரை இருந்தாலும் வெற்றிக்கனியை பறிப்பதற்கு எம்ஜிஆரை அழைத்தனர். திமுக வெற்றி பெறுவதற்கு எம்ஜிஆர் தனது திரைப்படங்களை பயன்படுத்தி கடுமையாக உழைத்தார் . அவர் ரசிகர்களும் அவ்வாறே கடுமையாக போட்டியை சந்தித்து களம்கண்டனர். வெற்றிக்கு உதவினர் . விஜய் இன்றுவரை வீதியில் இறங்கி போராடவில்லை. பத்திரிகையாளர் கூட்டம் நடத்தவில்லை. ஒரு பத்திரிகைக்கும் பேட்டியை அளிக்கவில்லை. பூத் கமிட்டீ வேலைகள் பாதியளவுகூட பூர்த்தியாகவில்லை. வட்டம், மாவட்டம், ஒன்றியம், இப்படி அனைத்திலும் நிர்வாகிகள் நியமனம் நூறு சதவீதம் பூர்த்தியாகவில்லை. மக்களுக்காக இவரோ அல்லது இவர் கட்சிக்காரர்களோ சட்டப்போராட்டம் எதுவும் நிகழ்த்தவில்லை. இவர் கட்சி கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு ஒரு பேங்க் அக்கௌன்ட் துவக்க தேவைப்படும் பாரம் கூட பூர்த்தி பண்ண தெரியாது. அரசு உதவித்தொகை எப்படி வாங்கித்தருவது என்ற விவரம் கூட இவர் கட்சிக்காரர்களுக்கு தெரியாது. அரசு எந்திரம் எப்படி செயல்படும் என்ற விவரங்கள் இவர் கட்சியில் எல்லோருக்கும் தெரியுமா ? எந்த நம்பிக்கையில் மக்கள் இவருக்கு வோட்டுப்போடுவார்கள் என்று தெரியவில்லை. திரைப்படம் , வாழ்க்கை இரண்டையும் ஒன்றாக பார்த்த மக்கள் அந்த காலத்தில் இருந்தார்கள். படங்களின் தரம் அவ்வாறு இருந்தது. இப்போது அப்படியா ? திரைப்பட மாயையை மக்கள் நன்றாகவே உணர்ந்து இருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு, நிஜத்தில் எது சாத்தியம் ஆகும் என்றெல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. விசிலடிச்சான் குஞ்சுகளின் கூட்டத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு காண்கிறார் விஜய். காலஓட்டத்தில் கரைந்து போகவேண்டிய கட்சிதான் தவெக .


SENTHIL NATHAN
ஜூலை 30, 2025 15:45

அங்கே ஒரு ஸைமண்ணாளே பாதி பேர் பிராண்டறாகொ இந்த விசயினாள மீதி பேரும் பிறான்டுனா தமிழகம் என்ன ஆகும்???????


Vijay D Ratnam
ஜூலை 30, 2025 15:37

இஸ்லாமிய வாக்குகள் பள்ளிவாசல்களில் முடிவு செய்யப்படுபவை. அவை விஜய்க்கு விழ வாய்ப்பில்லை. மற்றபடி மதமாற்ற மாஃபியா கும்பல், மிஷனரி ஓநாய்கள் சப்போர்ட் விஜய்க்கு இருந்தால் கிருஸ்தவ வாக்குகள், அல்லொலியா, க்ரிப்டோ கிருஸ்தவ வாக்குகள் விஜய்க்கு விழும். அவரது தீவிர ரசிகர்கள், கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் அறிவு ஜீவிகள் வாக்குகள் விஜய்க்கு விழும். அவ்ளோதான். சிரஞ்சீவி மாதிரி 2026 ல் சினிமாவில் நடிக்க போய்விடுவார்.


Haja Kuthubdeen
ஜூலை 30, 2025 17:25

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் ஏதாவது ஒன்றில் வெள்ளிக்கிழமை 12.30மணிக்கு சொற்பொழிவு நடக்கும்.வெள்ளி கிழமை ஒருநாள் மட்டும்தான் உலகம் முழுதுமே பொது சொற்பொழிவு அதன் பிறகு தொழுகை நடக்கும்.அதை காது கொடுத்து கேளுங்கள்.முழுக்க முழுக்க இஸ்லாமியத்தை பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.யாருக்கு ஓட்டு போடனும் போடக்கூடாது என்று அறிவிக்க அது அரசியல் மேடை அல்ல.


Kannan Chandran
ஜூலை 30, 2025 14:30

அவரே நேரா போயிருவாரா?அணில்குஞ்சுகளுக்கு எங்கடா இருக்கு அறிவு.. தமிழ்நாட்டில் ஏறக்குறைய இரண்டு கோடி வீடுகள் இருக்கு. இதுல ஒரு நாளைக்கு 50 வீடு சென்றால்கூட, ஆயிரம் வருடம் முடிந்து விடுமே.


தொளபதி
ஜூலை 30, 2025 14:24

ஒற்றை இலக்க வாக்கு சதவீதத்தை வச்சி மாற்றமெல்லாம் நடக்குமாங்க்ணா? ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி. போங்க்ண்ணா


angbu ganesh
ஜூலை 30, 2025 14:13

சொத்துக்களை காப்பாற்றிக்க ஆரம்பிச்ச கட்சி ஜெயித்து நாட்டுக்கு நல்லது பண்னா சந்தோஷம்