உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: த.வெ.க., தலைவர் விஜய் 10, 12ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.தமிழகம், புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில், சட்டசபை தொகுதி வாரியாக, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.இந்நிலையில் இன்று(மே 30) சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கி விஜய் பாராட்டினார் . அவர் பேசுகையில், 'நீட் படிப்பு மட்டுமே படிப்பு அல்ல. அதற்கு வெளியே இன்னும் ஏராளமான படிப்புகள் உள்ளன. மாணவ மாணவியர், எக்காரணம் கொண்டும் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது என்று பெற்றோரை வலியுறுத்த வேண்டும் ' என்று வலியுறுத்தினார். பெற்றோர் முன்னிலையில், மாணவர்களுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை ஆகியவற்றை, த.வெ.க., தலைவர் விஜய் வழங்கினார். விருது பெற்ற மாணவர்களுடன் விஜய் போட்டோ எடுத்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sundar ponnumuthu
ஜூன் 04, 2025 21:19

நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளியில் படித்து 497/500 மதிப்பெண் பெற்றுள்ளேன்.தவெக அழைப்பிதழ் வரும் என்று மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கிடைத்தது மிகவும் ஏமாற்றமே


Geetha
மே 30, 2025 10:43

டிவிகே பொது அறிக்கைகளின் அடிப்படையிலும், டிவிகே உறுப்பினர்கள் முன்பு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலும், ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரவிருக்கும் விஜய் விழாவின் போது கௌரவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே என்று பத்திரிகைகளிலோ அல்லது எந்த அதிகாரப்பூர்வ தகவலிலோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இப்போது இந்த அங்கீகாரத்திற்குத் தகுதியுடையவர்கள் என்று சமீபத்தில் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மெட்ரிகுலேஷன்/தனியார் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்பட்டு, தகுதியின் அடிப்படையில் அங்கீகாரம் பெற எதிர்பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்ற மாணவர்களுக்கு இந்தக் கடைசி நிமிட மாற்றம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது மற்றும் நியாயமற்றது.. எங்கள் தொகுதியில் 12 ஆம் வகுப்பில் நான் முதல் மதிப்பெண் வாங்கி உள்ளேன் . ஆனால் எனக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை அரசுப் பள்ளி மாணவர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன், ஆனால் அத்தகைய அங்கீகாரங்கள், முதலில் தகுதி அடிப்படையிலானதாக அறிவிக்கப்படும்போது, பள்ளி வகையின் அடிப்படையில் மாற்றப்படக்கூடாது. இந்த திடீர் கொள்கை மாற்றத்தால், பிற பிரிவுகளைச் சேர்ந்த பல கடின உழைப்பாளி மாணவர்கள் ஊக்கம் இழந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். பொது அறிவிப்புகள் மற்றும் தகுதி அளவுகோல்களில் இதுபோன்ற முரண்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு எதிர்காலத்தில் தவிர்க்கப்படும் வகையில், இந்த பிரச்சினையை உங்கள் தளத்தின் மூலம் கவனத்திற்குக் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.


Yes God
மே 30, 2025 10:12

ஓட்டுகள் கொடகிராப் பசங்க கிட்ட கீதுன்னு விஜயிக்கு தெரியும்.


Svs Yaadum oore
மே 30, 2025 09:43

தொட்டபட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா என்று கல்வியை ஊக்குவிக்கிறாரு ....


Yes God
மே 30, 2025 10:14

சொல்றத ஏன் மடக்கறீங்க


Svs Yaadum oore
மே 30, 2025 09:40

தடபுடல் ஏற்பாடாம்.. இது எதுக்கு என்றால் சினிமா ஆபாசங்களை காட்டி வருங்கால வாக்காளர்களை ஏமாற்றி நிரந்தர சினிமா அரசியல் அடிமைகளை உருவாக்கத்தான்.. இதுக்கு முகமுடி கல்வியை ஊக்குவிக்கிறாராம்.. அப்ப அந்த காலத்திலலேயே சிதம்பரம் அண்ணாமலை செட்டியார், பச்சையப்பன் அறக்கட்டளை என்ற இவர்கள் எல்லாம் யாரு ??....


Svs Yaadum oore
மே 30, 2025 09:32

தமிழ் நாட்டில் பள்ளி மாணவர் மாணவிகளை சினிமாவை காட்டி சீரழித்தது இப்படித்தான் ....பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க முன்னுதாரணமாக தமிழ் கலாச்சாரத்தில் படித்த உழைத்து முன்னேறிய பண்பாளர்கள் யாருமே கிடையாது ..சினிமா நடிகனுங்கதான் வாழ்க்கையில் முன்னோடி ...வாழ்க்கையில் எந்த பிரச்சனைக்கும் அந்த சினிமாவில் அப்படி சொன்னான் இந்த சினிமாவில் இப்படி செய்தான் என்பானுங்க ....இவனுங்கதான் வள்ளுவருக்கு சிலை வைத்த படித்து முன்னேறிய திராவிடனுங்க ....


Nada Rajan
மே 30, 2025 08:37

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் வாழ்க


Svs Yaadum oore
மே 30, 2025 09:34

அப்படியா ??.....அப்ப பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்ன அவ்வை பாட்டி யாருங்க ??.....


sundarsvpr
மே 30, 2025 08:32

அதிக மதிப்பு எண் பெற்றவரை பாராட்டுபவர்கள் எல்லா நிலையிலும் இருப்பார்கள். பலன் எதிர்பாராமல் ஆத்மார்த்தமாய் இருக்கும். ஏற்புடையதுதான். அதைவிட தோல்வி அடைந்த சில மாணவர்களை தேர்ந்து எடுத்து மேல்நிலைக்கு கொண்டுவந்து பிரகாசப்படுத்துவது உண்மையான தர்மம். இந்த பணியினை எவரும் செய்யலாம். சகோதரத்துவம் பெருகும்.


Barakat Ali
மே 30, 2025 08:31

டிவிகே, நாம் தமிழர் இரண்டும் அதிக பொருட்செலவில் டீம்காவால் இறக்கப்பட்டுள்ள கட்சிகள் .... இறக்கப்பட்டதின் நோக்கம் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க .... அதாவது எதிர்ப்பு வாக்குகள் மொத்தமாக அதிமுகவுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக ..... டிவிகே, நாம் தமிழர் இரண்டும் எதிர்ப்பு வாக்குகளில் பங்கெடுத்தால் அதிமுக-பாஜக வின் வாக்குவங்கியில் ஓட்டை விழும் ..... திமுக மீண்டும் வெல்லும் .....


கடவுள் உள்ளார்
மே 30, 2025 10:09

விஜய் பலே கில்லாடி கொடகார பசங்க கிட்டதான் எல்லா ஓட்டுகளும் மாட்டிகினுகீதுன்னு அவருக்கு தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை