உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன்: குடியரசு தினத்தில் அறிவிப்பு!

விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன்: குடியரசு தினத்தில் அறிவிப்பு!

சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படத்திற்கு 'ஜனநாயகன்' என பெயரிடப்பட்டுள்ளது.எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக பல கட்டமாக சென்னையில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.,26) காலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‛ஜனநாயகன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில், தொண்டர்கள் முன்பாக நடிகர் விஜய் வேனில் ஏறி ‛செல்பி' எடுப்பது போன்று படம் இடம்பெற்றுள்ளது.அரசியல் கட்சி துவக்கியுள்ள விஜய்யின் கடைசி படம் என்பதால், இது அரசியல் கதையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை இரண்டாவது பார்வை வெளியிப்பட்டது. சாட்டையுடன் விஜய் நிற்கும் இந்த போஸ்டரில், ' நான் ஆணையிட்டால்...' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.தற்போது, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் கால் எடுத்து வைத்துள்ள, விஜய் கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Venkatesan Ramasamay
ஜன 27, 2025 09:43

ஜனநாயகன் ...ஆஹா ...படத்தோட தலைப்பு அருமையாக இருக்கிறது.. படம் நிச்சயம் வெற்றிபெறும். அவர் அரசியலிலும் வெற்றிபெறுவார் ....2026 ம் ஆண்டு தமிழக முதலமைச்சரே ....வா தலைவா வா ...உன் வரவுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் சீட்டு அன்புடன் வரவேற்கிறது.


Mohan
ஜன 26, 2025 20:29

மக்களே உண்மையில் நடிகர் விஜய் எதற்கு அரசியலுக்கு வந்தார் ? எவ்வளவு காலம் மக்கள் நலன் பற்றி யோசித்தார் ?


HoneyBee
ஜன 26, 2025 17:31

நான் ஆணையிட்டால்... சோசப்பு இது உனக்கே அதிகமா தெரியல. வா ராசா அடுத்த சினிமா வேஸ்ட் லக்கேஜ். நைனா எல்லாரும் எம்சியாரு ஆயிட முடியாது. இப்பவே பணத்தை சுருட்டி வாழும் உன் கூட்டம் அடுத்த திராவிட மாடல் தானே


BHARATH
ஜன 26, 2025 17:01

இந்த மூஞ்சி அதுக்கு சரி பட்டு வராது.


Ganesun Iyer
ஜன 26, 2025 16:27

சாட்டைனாலே 2 பேர்தான். எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் சிவந்த மண் சிவாஜி மத்தவங்கள எல்லாம் பம்பரம் விடும் சாட்டை தான். அண்ணாமலைக்கே செட்டாகவில்லை.. இதுல இவரு வேற நடுவில காமெடி செஞ்சி கிட்டு.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 26, 2025 16:09

விஜய் படம் எல்லாமே ஒரு வாட்டி பார்க்கலாம்.என்கிற தரத்தில் இருக்கும். இரண்டு மணி நேரம் என்டர்டெயின்மென்ட் உத்தரவாதம்.


prasath
ஜன 26, 2025 14:39

என்னடா இது ஜனநாயகத்திற்கு வந்த சோதனை


Jay
ஜன 26, 2025 14:35

இது எத்தனாவது கடைசி படம்?


Barakat Ali
ஜன 26, 2025 14:30

கடந்த சினிமாவையே அவரது கடைசி படம் என்று அறிவித்ததாக நினைவு ......


Jay
ஜன 26, 2025 14:26

நமது மாநிலத்தை ஆட்சி செய்ய நல்ல தலைவரை தேடாமல் நல்ல நடிகனை தேடுவது அறிவீனம் எப்போது மறையும்?


புதிய வீடியோ