உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயால் ஆட்சி மாற்றம் வரும் என மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் : திருமா ஆதங்கம்!

விஜயால் ஆட்சி மாற்றம் வரும் என மாயத்தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் : திருமா ஆதங்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விஜயின் வரவால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்' என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: விடுதலை சிறுத்தை கட்சிக்கும் லட்சக்கணக்கானோர் திரள்கிறார்கள். அண்மையில் நாங்கள் நடத்திய மாநாட்டில் பல லட்சம் பேர் திரண்டார்கள். அதனை வைத்து விசிக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்று எந்த ஊடகமும் விவாதம் செய்யவில்லை. திருமாவளவன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா, மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று யாரும் விவாதிக்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aynscujn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மாயத் தோற்றம்

விஜய் ஒரு பிரபலமான சினிமா நடிகர், கதாநாயகர் என்பதை வைத்துக் கொண்டு, பெரிய மாற்றம் நிகழப்போகிறது என்பதைப் போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள். திமுக, விசிக போன்ற கட்சிகளுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரும் லட்சக்கணக்கான பேரும், அரசியல் சக்திகளாக வருகிறார்கள். கொள்கை, கோட்பாட்டு புரிதலோடு களத்தில் நிற்கிறவர்கள், நீண்டகாலமாக அரசியல் களத்தில் மக்களோடு நிற்பவர்கள். அந்தப் பெரும் திறனுக்கும், நண்பர் விஜய்க்கு திரண்டவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆகவே இந்த மக்கள் கூட்டத்தை மட்டுமே பொருட்டாக எடுத்துக் கொண்டு ஆட்சி மாற்றத்தையே நிகழ்த்தப் போகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்து. விஜய் தொடர்ந்து திமுகவை பற்றி மட்டுமே பேசி வருவதால், அவர் ஏதோ திட்டமிடப்பட்ட அஜெண்டாவிற்காக வந்திருக்கிறார் என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது. அவர் பொதுவாக பரவலாக தமிழக அரசியலை பற்றி பேசியிருந்தால், அவர் எதிர்காலத்தில் என்ன செய்கிறோம் என்பது பற்றி பேசியிருந்தால் இந்த தோற்றம் உருவாகாது. எனவே அவர் திட்டமிடப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டவரா என்ற கேள்வியும் எழுகிறது.

மாற்றம் வருமா?

கமலஹாசன் இன்று திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறார். அவர் அரசியலில் அடி எடுத்து வைத்த போது அரசியலை பார்த்த முறை வேறு. அரசியலுக்குள் ஒரு தலைவராக களத்தில் இறங்கிய பிறகு அவர் அரசியலை அணுகு முறையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. கொள்கை சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதாக நான் நம்புகிறேன். விஜயை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவருடைய அணுகு முறையிலும் நிலைப்பாட்டிலும், எதிர்காலத்தில் மாற்றம் நிகழ்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

விஜய்க்கு வாழ்த்துக்கள்

முன்னதாக, கோவையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: இன்று பிரசாரத்தை துவங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது அவருடைய களப்பணியை தீவரப்படுத்தி இருக்கிறார். மகிழ்ச்சி. அவர் அரசியலில் அடி எடுத்து வைத்திருப்பதன் மூலம், தேர்தல் அரசியலில் என்ன தாக்கம் ஏற்படப்போகிறது என்று விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுத்தேர்தல்

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்த ஒரு அணி மட்டும்தான் தமிழகத்தில் இப்போது ஒரு உருவத்தை, வடிவத்தை பெற்று இருக்கிறது. வலுவாகவும் இருக்கிறது. தொடர்ந்தும், இயங்குகிறது. 2016, 17ல் உருவான இந்த அணி, கட்டுக்கோப்பாக பல தேர்தல்களை சந்தித்து, வெற்றி வாகை சூடிய நிலையில் இப்போது 2026ம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டசபை பொதுத் தேர்தலையும் சந்திக்க உள்ளது. இந்த அணியை வீழ்த்துவோம் என்று பல முனைகளில் இருந்து குரல்கள் வருகின்றன. அதில் ஒரு குரல் விஜய்யின் குரல்.

எந்த பாதிப்பையும்...!

இன்னொருபுறம் அதிமுக. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும். ஆனால் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான்.

பலமில்லை

அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவம் பெறவில்லை விஜய் தனியாக செல்வார் என்று தான் கூறுகிறார்கள் தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருக்கிறது ஆனால் அதுவும் இன்னும் வடிவம் பெறவில்லை. திமுக கூட்டணியை வீழ்த்தும் அளவிற்கு விஜய் பலம் பெறவில்லை இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

INDIAN Kumar
செப் 16, 2025 18:08

நீங்கள் திமுக கூட்டணியிலே இருங்கள் அப்போதுதான் தோற்க வசதியாய் இருக்கும்


INDIAN Kumar
செப் 16, 2025 18:06

புலம்பி புலம்பி செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார் விசிக தலைவர்


Padmasridharan
செப் 15, 2025 07:55

யார் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சொல்லவில்லையே சாமி. அவரு ஒருத்தர இறக்கணும்னு பாக்கறாரு மத்தவங்கள போல, தனியா நிக்கறாருனு கமலுக்கு போட்ட ஓட்டுகள வேற மாதிரி பயன்படுத்திக்கிட்டாரு அவரு. .


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2025 07:55

நாங்க இவ்ளோ வருஷம் ஆட்டம் போட்டு நாறடிட்த்தோம் ஆனாலும் ஒன்னும் பண்ணமுடியால ஆனால் நேற்று வந்த ஆதவ் அர்ஜுன் என்ன ஆட்டம் காட்றான் என்று மைண்ட் வாய்ஸ் சொல்லுது பிளாஸ்டிக்


ராமகிருஷ்ணன்
செப் 14, 2025 07:15

ஏன் நீங்க துணை முதல்வர் பதவி வேணும் என்று பிலிம் காட்டல்லே, அது மாதிரி தான் டீவிக்க கட்சியும் பிலிம் காட்டுகிறது.


M Ramachandran
செப் 13, 2025 23:29

நீங்க அடிக்கடி விஜயய்யை பற்றி ஊடகங்களுக்குக் பேட்டி கொடுப்பதைபார்த்தால் உங்களின் துண்டு போடும் விருப்பம் தெளிவாக தெரிகிறது. தங்களுக்கு கூட்டணியில் இடம் ஒதுக்கும் படி அச்சாரம் போடுவது தெளிவாகிறது. உங்க தற்போதய கூட்டணியை மிரட்டும் தொணியும் தெரிகிறது. நடக்கட்டும் நடக்கட்டும்.ஏறியிற வீட்டில் புடுங்கினது ஆதாயம்.


RAJ
செப் 13, 2025 22:09

செரி ... நீங்க தனியா நின்னு ஒத்த சீட்டு வாங்க தில் இருக்கா?


vadivelu
செப் 14, 2025 07:13

சும்மா உசுப்பு ஏற்றுவதாக நினைப்பா, அவர் தனியாக நின்றால் தி மு க திரும்ப ஆட்சிக்கு வர முடியாது. .


Vasan
செப் 13, 2025 21:35

As more and more parties Vijays TVK for example con individually, then the anti-DMK votes will get split, and DMK will still emerge as single largest party with their vote share. Hence DMK will not give importance to its alliance parties like Thirumas VCK, who can not demand more seats. Thats the worry for VCK.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 13, 2025 20:44

எல்லாம் பிரமை.திமுக ஆதரவு வாக்குகள் ஒரு போதும் மாற்றுக் கட்சிக்கோ, எதிர்கூட்டணிக்கோ போகாது.


Kjp
செப் 13, 2025 20:18

திருமாவை ஏனப்பா புலம்ப வைக்கிறீர்கள். எடப்பாடி கூடும கூட்டத்தை பார்த்து புலம்பல். விஜய்க்கு வரும் கூட்டத்தைப் பார்த்து புலம்பல். படிவம் வடிவம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் இருக்கிறது திருமா அவர்களே. அதற்குள் திமுகவை எதிர்க்க ஒரு வடிவம் பெற்று விடும். புலம்ப வேண்டாம். வயிற்றெரிச்சல் பட வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை