உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை வெறுப்பேற்ற விஜய் வியூகம்; காங்., ராகுலை சந்தித்து பேச திட்டம்

தி.மு.க.,வை வெறுப்பேற்ற விஜய் வியூகம்; காங்., ராகுலை சந்தித்து பேச திட்டம்

சென்னை: அண்ணாதுரை பிறந்த நாளில் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்கி, தி.மு.க.,வை கடுப்பேற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், தன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். சமீபத்தில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய உற்சாகத்தில் உள்ளார். தற்போது, ஜனநாயகன் படத்தின் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு முன் மக்கள் சந்திப்பை துவக்கி, முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி தரப்போவதாக, மாநாட்டில் விஜய் அறிவித்தார். அதன்படி, செப்., 15 முதல், தன் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்க உள்ளார். தி.மு.க.,வினரை கடுப்பேற்றும் வகையில், அண்ணாதுரை பிறந்த நாளில் நடைபயணத்தை துவக்க உள்ளார். இதனிடையே, கூட்டணி தொடர்பாகவும் சிறிய கட்சிகளுடன் விஜய் பேச்சு நடத்தி வருகிறார். காங்., கூட்டணிக்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். தற்போது, பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் உள்ளார். இதில் பங்கேற்க, பல்வேறு சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விஜயை பீஹார் அழைத்து சென்று, ராகுலுடன் கைகோர்க்க வைக்க, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர். இதற்கு விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த தி.மு.க., தலைமை, ராகுல் - விஜய் சந்திப்பை, காங்., மூத்த தலைவர்கள் உதவியுடன் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Rajupillai Ramachandran
ஆக 28, 2025 17:16

காங்கிரஸ் போனா போகட்டும்


Chandhra Mouleeswaran MK
ஆக 28, 2025 15:27

அது என்னாங்க அது? போன வாட்டி எலக்சனுக்கு ஒரு கச்சி மொளச்சுதே என்னாது? "ஓரம்" தான? - - - இல்லில்ல "மய்யம்" அதுகூட, அத்தாஹப் பட்டது கம்மாலு ஹூசைனு - - இதே மாரிதானே ட்ட்டில்லிக்கிப் போயி அந்த ராவுலு அல்பினோ வின்ஸியக் கட்டிப் புடுச்சு முத்தம்லாம் குடுத்து ஜாயிண்டு பண்ணுச்சு? இங்க பேசினாக்க ஆலிண்டியாத் தலீவரு ஆவ முடியாதில்லியா? இனிமேப் பாருங்க தவக்காவும், அதே மாதிரி, பொட்டிகெல்லாம் சூதானமா வூட்டுக்கு வந்த ஒட்ட்டனே, " - - - - மதவாதக் கும்பல ஒளிச்சு வெய்க்கணும்கரத்துக்காவவே நானு காங்கிரசுக் கமிசன் மண்டிகூடக் கூட்டு சாம்ப்பார் குளம்பு அல்லாம் வச்சுச் சேரப் போரன் எலக்சனுலெ நிக்கர மாரி அய்ய்டியால்லாம் இல்ல அத்துக்குப் பதிலா முளு ஆதரவு குடுக்கப் போரன் முக்கா ராச்சிய சபா எம்பி குடுக்கரம்னுட்டாவ அவிய தமிளு நாட்டுல் அ - - அது என்னா? ஊதல - - வந்து - - ஊளல முச்சூடா ஒளிக்கர வரய்க்கி இந்தத் தவக்கா ஓயாது தாய்க்கொலத்து மேலெ சத்தியம்" அப்டீன்னுட்டு, கிலோக்கு ரண்டு ருவாங்கர ரேட்டுல கச்சியயும் தொண்டருகளயும் நாக்காலி மேசை கட்டகம் அல்லாத்தயும் ஓலாச் சேத்து வித்துரும் கம்மாலு ஹுஸைனு மாதிரியே


M Ramachandran
ஆக 28, 2025 12:43

ரஜினி கூடஇப்படி ஆர்பித்தார்.இந்த சைக் கிலும் சீக்கிரமே புஸ்னு பஞ்சராயிடும்.


Rathna
ஆக 28, 2025 11:23

மதமாற்ற கும்பல் சந்திப்பது சரிதானே


M Ramachandran
ஆக 28, 2025 01:31

விஜய்க்கு நாக்கிலேயே சனி . பைத்தத்து கூட சம்பந்தம். கிளிஞ்சது. போறத காலம் பேன்ட்டை கழட்டிகிட்டு ஓடப்போரார்


SENTHILKUMAR
ஆக 27, 2025 21:30

இந்த தேர்தல் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணிகளுக்கு மட்டுமே... இதில் சைமன், ஜோசப் இவர்களுக்கு கடைசி இடத்திற்கு போட்டி....


திகழ்ஓவியன்
ஆக 27, 2025 20:05

சாரி ALREADY எனக்கு ஆளு இருக்கு என்று LOVER சொல்லுவது போல இவருக்கு சொல்லி விட்டார்களா , இதுவே விஜய் குரூப் அந்த அங்கிள் விஷத்தை DIVERT செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட புருடா என்கிறார்கள்


Perumal Pillai
ஆக 27, 2025 17:29

அவரும் சிலுவை .இவரும் சிலுவை . சிலுவை இது சிலுவை .


M Ramachandran
ஆக 27, 2025 17:02

சுய மனித ஒழுக்கம் இல்லாத விஜய் ஒரு சந்தைக்கு போன ஒரு அடி மாடு.


S Balakrishnan
ஆக 27, 2025 16:22

கடந்த பாராளுமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் OPS, பாஜக தயவில் ADMK சின்னத்தில் ஒரு MP தொகுதி ஜெயித்தார். அதேபோல் விஜய் கட்சி காங்கிரஸ் தயவில் ராகுல் சிபாரிசில் DMK விடம் ஒரு சில MLA சீட் வாங்கி வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் கூட இருக்கலாம். எல்லாம் அரசியல் தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை