உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று

பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று

சென்னை: சொத்து விற்பனையில் கிரையப்பத்திரம் பதிவான சில மணி நேரத்தில், வில்லங்க சான்றிதழ் மொபைல் போனுக்கு அனுப்பும் வகையில் பணிகளை, பதிவுத் துறை முடுக்கி விட்டுள்ளது.தமிழக சார்-பதிவாளர் அலுவலகங்களில், 'ஸ்டார் 2.0 சாப்ட்வேர்' பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பதிவு நாளிலேயே பத்திரத்தை பொதுமக்களுக்கு அளிக்க உத்தரவிடப்பட்டது. பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து குறித்து, கள ஆய்வு தேவைப்படும் நிகழ்வுகள் தவிர்த்து மற்ற அனைத்து பத்திரங்களையும் அதே நாளில் திருப்பித்தர வேண்டும் என, சார்-பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பதிவு பணிகளை விரைவாக முடித்தாலும், சொத்து பரிமாற்றம் குறித்த விபரங்களை பதிவுத் துறையின் தகவல் தொகுப்பில் சேர்க்க ஓரிரு நாட்கள் ஆகும். இதன்பின் தான் பொது மக்கள், அந்த குறிப்பிட்ட சொத்து பரிமாற்றம் குறித்த வில்லங்க சான்றிதழை பெற முடியும்.இந்நிலையில், பதிவு முடிந்த நாளிலேயே பத்திரம் கிடைக்கும் முன், வில்லங்க சான்றிதழை சம்பந்தப்பட்ட நபருக்கு மொபைல் போன் வாயிலாக அனுப்பும் புதிய நடைமுறையை, பதிவுத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது.இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவாகும்போது, அது குறித்த விபரங்கள், தகவல் தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில், பத்திரம் பதிவு செய்தவரின் மொபைல் போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., தகவல் வரும். அதில் உள்ள இணைப்பை, 'கிளிக்' செய்தால், கடைசியாக நடந்த பத்திரப்பதிவு விபரம் அடங்கிய வில்லங்க சான்றிதழ் பிரதி கிடைக்கும். பொதுமக்கள், இதை எவ்வித கட்டணமும் இன்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.இந்த இணைப்பில், 30 நாட்களுக்கு வில்லங்க சான்றிதழ் அப்படியே இருக்கும். சொத்து வாங்கியவர்கள், அதன் அடிப்படையில் சொத்து வரி, மின்சார இணைப்பு உள்ளிட்ட பெயர் மாற்றம் செய்ய, இது உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

T.J.RAVI T.JAYARAMANRAVI
ஜூன் 20, 2025 16:03

அருமையான பதிவு....


ராஜா
ஜூன் 20, 2025 14:44

அரசின் எந்த திட்டங்களும் மக்களுக்கு செல்ல வேண்டுமானால் கண்டிப்பாக கரன்சி நோட்டுகள் தான் வேண்டும் கொண்டு செல்லும்.


Kulandai kannan
ஜூன் 19, 2025 10:58

இதேபோல் பட்டாவும் உடனடியாக, இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


rama adhavan
ஜூன் 19, 2025 10:10

நல்ல திட்டம். வாழ்த்துக்கள். பதிவுத்துறை மென்பொருள், விளக்க கை ஏடு சிறப்பாக உள்ளது. ஆனால் நாமே ஆவணத்தை பதிவேற்றலாம் என்ற பகுதியில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதை சரி செய்ய வேண்டும், எளிமையாக்க வேண்டும்.


V RAMASWAMY
ஜூன் 19, 2025 09:34

கட், காபி, பேஸ்ட் செய்து சுய விளம்பரம். அதற்கு ஒரு மாடல் பெயர்.


Ramesh Sundram
ஜூன் 19, 2025 09:32

முக்கியமான document காந்தி படம் போட்டு reserve வங்கி governor கையெழுத்து இட்ட document இருந்தால் வில்லங்கம் இல்லாமல் வில்லங்க சான்றிதழ் கிடைக்கும்


rama adhavan
ஜூன் 19, 2025 15:57

வில்லங்க சான்றிதழை ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரில் போகவோ, கூடுதல் பணம் கொடுக்கவோ வேண்டாம். பத்திரம் பதியவோ, திருமண பதிவுக்கோ மட்டும் நேரில் செல்ல வேண்டும். கட்டாயம் ஏஜென்ட் மூலம் பணம் கொடுத்தால் தான் காரியம் முடியும்.


Raj
ஜூன் 19, 2025 08:30

என்னதான் அட்வான்ஸ்டா பண்ணாலும் அட்வான்ஸ் மாலு பண்ணாம எந்த வேலையும் நடக்காது


VENKATASUBRAMANIAN
ஜூன் 19, 2025 07:57

இது கர்நாடகாவில் அமுல் படுத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலே உள்ளது. இப்போது தான் தமிழ்நாட்டில் வருகிறது. இதுதான் திராவிட மாடல்


GMM
ஜூன் 19, 2025 07:44

பத்திர பதிவுக்கு முன் வரை சொத்து மீது பல ஆண்டுகளுக்கு வில்லங்கம் இல்லை என்று சான்று பெற்று தான் பதிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு படி, பெரும்பாலான தமிழக பத்திர பதிவுகள் செல்ல தக்கவை அல்ல. பத்திர பதிவுக்கு பின் வில்லங்கம் உடன் ஏற்படாது. மொபைல் சான்று உடன் பயன் படாது. வீட்டு வரி, மின் கட்டணம் பாக்கி இல்லை, பெயர் மாற்ற ஆட்சேபனை இல்லை என்று உரிமையாளர் சான்று பெற்று பதிய வேண்டும். வில்லங்க சான்று இதற்கு உதவாது. பட்டா மாற்ற பதிவின் போது வருவாய் துறை விதிமுறை பின் பற்றியது இல்லை. ஊழல் துறை?