உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த இயலாது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த இயலாது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: '' மத்திய அரசால் நடத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ஜாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதால், அதனை செயல்படுத்த இயலாது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி, கடனுதவி அளிப்பதற்காக, 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டத்தை, 2023 ம் ஆண்டு பிரதமர் துவக்கி வைத்தார். இத்திட்டமானது, 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாடு முழுதும் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன . இத்திட்டத்தின் கீழ், அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, நிதி உதவி, கருவிகள் மற்றும் சந்தைபடுத்துதலில் உதவி உள்ளிட்டவை வழங்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kigg801y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சிக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: விஸ்வகர்மா திட்டம் ஜாதி அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு இத்திட்டத்தில் மாற்றங்களை செய்ய பரிந்துரைத்தது. அவற்றை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.பரிந்துரை1. விண்ணப்பதாரரின் குடும்பம், பாரம்பரியமாக குடும்ப அடிப்படையிலான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத் தேவையை நீக்க வேண்டும். அதற்கு பதில், வழிகாட்டுதல்களில் பட்டியலிடப்பட்டு உள்ள எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ள விரும்பும் எந்தவொரு நபரும் இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதி உடையவராக இருக்க வேண்டும்.2. இத்திட்டத்தில் பயன்பெறுவோரின் குறைந்தபட்ச வயது வரம்பினை 35 ஆக உயர்த்தலாம். இதனால், தங்கள் குடும்ப வர்த்தகத்தைத் தொடர அதனை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற முடியும்.3. கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக, வருவாய்த்துறையைச் சேர்ந்த வி.ஏ.ஓ.,விடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.ஆனால், மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திடம் இருந்து வந்த பதில் கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.எனவே பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லாது. இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின் கீழ் தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழக அரசு செயல்படுத்தும் இந்த திட்டம், ஜாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களும் முழுமையான ஆதரவு அளிக்கும். இத்திட்டம் அவர்களுக்கு நிதியுதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Rajkumar
ஏப் 19, 2025 16:48

இரும்புத்தொழில் கருமான், தங்கநகை பொற்கொல்லர், மரவேலை தச்சர், சிற்பவேலை சிற்பி, பாத்திரவேலை கன்னார்-5 தொழில்கள் செய்யும் விஸ்வகர்மாக்கள், ஆயுத பூஜை- சரஸ்வதி பூஜை பண்டைத் தமிழர் வழிபாடு கலாசாரம் அழிக்கலாம், தொழில் சங்கிலி அழிக்கலாம், தற்சார்பு கிராமங்கள் அழியும். போதுமா..?


panneer selvam
நவ 28, 2024 21:08

Viswakarma scheme is only for skill development any one but mainly addressed to people who are just matriculate .It is nothing to do with e or religion . The individual could undergo any short term training course as he likes. Any how blind anti Central government attitude put Tamilnadu in backward . No other state has objected Viswakarma scheme except DMK


Narasimhan
நவ 28, 2024 17:56

அதான் டாஸ்மாக் கர்மா ஜகஜோதியாய் நடைபெறுகிறதே. போதாது ?


ஆரூர் ரங்
நவ 28, 2024 14:43

திராவிட சித்தாந்தமே உழைக்காமல் பிழைப்பதுதான் என்பதால் முதல்வர் எதிர்க்கிறாரோ?. எந்தத் தொழிலாக இருந்தாலும் அதிக வருமானம் கிடைக்கும் என்றால் சாதி பேதம் பார்க்காமல் எல்லோரும் அதனைச் செய்ய ஓடி வருவார்கள். பல நுட்பமான கைவினைக்கலைகளை பல்லாண்டுகள் விடாமல் கடும் முயற்சி செய்துதான் கற்க முடியும். அதனால்தான் அவை குடும்பத் தொழில்களாகவே உள்ளன. அவற்றுக்கு ஊக்கமளிப்பதில் தவறில்லை.


Selliah Ravichandran
நவ 28, 2024 10:26

Why? because you can't make commission and corruption


orange தமிழன்
நவ 28, 2024 10:03

ஆக தமிழக மக்களுக்கு இது தோல்வி...திராவிட மாடல் ஆட்சியில் வேறு எப்படி இருக்கும்...நன்றாக சிந்தியுங்கள் மக்களே..... ஜெய் ஹிந்த்...


Sivakumar
நவ 28, 2024 02:15

This is working against the interests of the common public and appears to be favouring ONLY those schemes or programs wherein there is direct financial benefit to vested interests.


Raj S
நவ 28, 2024 00:14

உனக்கென்ன மக்களுக்குத்தான் நஷ்டம்... நீயும் உன் குடும்பமும் நல்லா ஊற ஏமாத்திகிட்டு அலையுவீங்க...


Kavi
நவ 28, 2024 00:14

விடியல் அரசு மக்களை முன்னேறவிடாமல் செய்வது என்பது தான் அதனால் அவர்களை சொல்லி எந்த தவறும் இல்லை மக்கள் தான் தவறு செய்த்துவிட்டார்கள்


kuruvi
நவ 27, 2024 23:31

விஷ்வா கர்மா என்ற வார்த்தையில் உடன்படில்லையேன்ரால் அதை தமிழில் பாரம்பரிய கைவினைதொழில் என்று குறிப்பிட்டு அவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உதவிகளை செய்யலாமே. பாரம்பரிய கைவினை தொழில் என்பதற்கு ஜாதி என்ற பொருளை எங்கிருந்து ஆராய்ச்சி செய்து கண்டீர்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலான பகுத்தரிவாளர்களுக்கு பகுத்தறிவுக்கு இலக்கணம் தெரியவில்லை.பகுத்தறிவு என்பதற்கு கடவுள் மருப்பொன்றே அவர்கள் கருதுவதுதான் காரணம்.செய்யும் தொழிலில் ஜாதி எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.ஒரு தமிழ் பேரறிஞர் கம்பராமாயணத்திலேயே ஜாதி இருக்கு என்று கூறி உதாரணமாக சலவை தொழிலாளியை ஜாதி என்று குறிப்பிட்டு பேசியது பெரிதிற்சுக்குள்ளக்கியது.செய்யும் தொழிலில் ஜாதி எங்கிருக்கிறது.விவசாயி என்றால் ஜாதியா?ஆசிரியர் என்றால் ஜாதியா?அரசியல்வாதி என்றாலும் ஜாதியா? அறியாமையை நீக்கி மக்களுக்கு வழக்கை முன்னேற்றத்தை தரக்கூடிய எதையும் முன்னெடுத்துச்செல்வது தான் அரசியலின் மாண்பு. செய்வீர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை