உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான் திட்டம் 

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான் திட்டம் 

ராமநாதபுரம் : இந்தியாவில் நவீன வேளாண்மையில் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 'விக்சித்கிருஷி சங்கல்ப் அபியான்' திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் இணைந்து காரீப் பருவத்திற்கு முன்பாக மே 29 (இன்று முதல்) ஜூன் 12 வரை 'விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்' என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகள், தமிழக அரசின் வேளாண் துறை சார்ந்த அனைத்து துறைகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.இதன்படி கிராமம் தோறும் உழவர்களிடம் வேளாண்மைக்கான அரசின் முன்னெடுப்புகள், சிறப்புத்திட்டங்கள், காலத்திற்கு உகந்த தொழில் நுட்பங்கள், உயர் விளைச்சல் ரகங்கள், பண்ணை கருவிகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி பின்பற்ற ஊக்குவிப்பது இதன் நோக்கம்.ஒரு மாவட்டத்திற்கு மூன்று குழுக்கள் அமைத்து ஒரு நாளில் 1200 விவசாயிகள் என 15 நாளில் 18 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடல், தொழில் நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை