வாக்காளர் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் கணக்கெடுப்பு பணி, நேற்று நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல், 19ம் தேதி வெளியாக உள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு உள்ளது. முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணி, நவ., 4ல் துவங்கியது. தமிழகத்தில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. இப்பணிகளை கடந்த, 4ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டது. அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இரண்டு முறை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்றுடன் அவகாசம் முடிந்தது. கடந்த 11ம் தேதி நிலவரப்படி, 815 பேருக்கு மட்டுமே கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்படவில்லை என, தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது. நேற்று இறுதி விபரம் வெளியிடப்படவில்லை. வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 19ம் தேதி வெளி யிடப்பட உள்ளது. அன்று வாக்காளர் பட்டியலில் எவ்வளவு பேர் இடம் பெற்றுள்ளனர். எவ்வளவு பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் தெரிய வரும்.