உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு: தி.மு.க., - ஐ.டி., அணி தலையீடு

வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு: தி.மு.க., - ஐ.டி., அணி தலையீடு

திருச்சி: திருச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, தி.மு.க.,வின் ஐ.டி., அணியைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில், முடிகண்டம் பகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர் வி.ஏ.ஓ., முத்தமிழ்செல்வி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன், தி.மு.க.,வின் ஐ.டி., விங்கை சேர்ந்த பெண் பணியாளர் ஒருவர், வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். ஓட்டுச்சாவடி அலுவலர் இல்லாமல், அரசியல் கட்சியின் ஐ.டி., விங்கை சேர்ந்த பெண் அந்த பணியில் ஈடுபட்டது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பினர். அதன் பின், அந்தப் பெண் பணியாளரை, திருப்பி அனுப்பி உள்ளனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேட்டால், 'அப்படியொரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை' என பதில் அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
நவ 11, 2025 08:12

இதுதான் திராவிட மாடல் அரசு. அதிகாரிகள் திமுக ஆதரவாளர்கள். களை எடுக்க வேண்டும்.


duruvasar
நவ 11, 2025 07:55

மர்ம பாலம் விவகாரம் மாதிரிதான். அதிகாரிகளுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது உரிமை போராட்டம்.


pandit
நவ 11, 2025 07:48

முழு பூசணிக்காய் ... தமிழக அரசு அதிகாரிகள் கை தேர்ந்தவர்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி