உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 234 தொகுதிக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

234 தொகுதிக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.தமிழக சட்டசபைக்கு, 2026 ஏப்ரலில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை தேர்தல் ஆணையம் துவங்கஉள்ளது.இதற்காக, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர், மாநகராட்சி இணை, துணை கமிஷனர்கள், சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி நிலையிலான அதிகாரிகளை, வாக்காளர் பதிவு அதிகாரிகளாக தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.சட்டசபை தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகளின் விபரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், நேற்று வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி